சிவப்பு காணான் கோழி
சிவப்பு காணான் கோழி | |
---|---|
கொல்கடாவிலுள்ள ஒரு சிவப்பு காணான் கோழி. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | Animalia
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. fusca
|
இருசொற் பெயரீடு | |
Porzana fusca (Linnaeus, 1766) |
சிவப்பு கானாங்கோழி (Ruddy- breasted Crake, "Porzana fusca") ஒரு நீர்ப்பறவை ஆகும். இது ரெயில் மற்றும் கிரேக் (Crake) Rallidae குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இது கூச்ச இயல்புடைய ஒரு பறவை ஆகும்.
இனப்பெருக்கம்
[தொகு]இப்பறவை தென் ஆசியா, இந்திய துணைக்கண்டம், கிழக்கிலிருந்து தெற்காக சீனா, சப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலுள்ள சதுப்புநிலங்கள் மற்றும் ஈரநிலங்களில் இனப்பெருக்கம் செய்யும்.
கூடு
[தொகு]இவை சதுப்பு நிலங்களிலுள்ள சற்றே காய்ந்த பகுதிகளில் தரையில் கூடமைத்து 6 லிருந்து 9 முட்டைகள் வரை இடும்.
தோற்றம்
[தொகு]இப்பறவை 22 – 23 செமீ. நீளம் உடையது. இதன் உருவம் பக்கவாட்டில் தட்டையாக உள்ளது. இதன் மூலமாக இது கீழ்ப்பயிர்கள் மற்றும் நாணல்களின் ஊடே எளிதாக செல்ல முடியும். இதற்கு நீளமான கால்விரல்களும் சிறிய வாலும் உண்டு. இப்பறவைக்கு வெளிறிய பழுப்பு நிற அடிப்பகுதிகள் உண்டு. இதன் அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேலும் இதன் கண்கள், கால்கள் மற்றும் பாதங்கள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
உணவு
[தொகு]இவை தாழ்வான நீர்நிலைகளிலோ நீர் தேக்கங்களிலோ உணவு தேடும். அவை தளிர்கள், பெர்ரிகள், பூச்சிகள் மற்றும் பெரிய நத்தைகளை உணவாக்கிக்கொள்ளும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Porzana fusca". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)