உள்ளடக்கத்துக்குச் செல்

சிவஞானப்பிரகாச வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவஞானப்பிரகாச வெண்பா என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான வள்ளல் என்பவரால் எழுதப்பட்டது.
சிவஞான வள்ளல் எழுதிய 20 நூல்களில் இது ஒன்று.
இது ஆகமச் செய்திகளைக் கூறும் நூல்.
இந்நூல் அப்பர், மெய்கண்டார், அருள்நந்தி, உமாபதி, கண்ணுடைய வள்ளல், காரைக்கால் அம்மை, நக்கீரர், திருமூலர், சம்பந்தர் ஆகியோரைக் குறிப்பிட்டு அஅவர்களின் அரிய செயலைப் போற்றுகிறது.
திருக்குறளை வியந்து போற்றுகிறது.

இதன் பாடல் (எடுத்துக்காட்டு)

சைவம் சிவத்தோடு சம்பந்தம் ஆனமையால்
சைவமே அத்துவிதம் சாதிக்கும் – சைவத்தை
வேறென்று கொள்ளற்க வேறற்ற வேதாந்தக்
கூறென்று கொள்ளுதலே கோள்.

சைவம் வேறு, சிவம் வேறு அன்று. இரண்டும் ஒன்றினுள் ஒன்று அடங்கியுள்ள அத்துவிதம் என்று இந்தப் பாடல் கூறுகிறது.

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவஞானப்பிரகாச_வெண்பா&oldid=1882237" இலிருந்து மீள்விக்கப்பட்டது