சிலோன் விஜயேந்திரன்
சிலோன் விஜயேந்திரன் | |
---|---|
பிறப்பு | ராஜேசுவரன் 1946 மாவிட்டபுரம், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை |
இறப்பு | ஆகத்து 2004 (அகவை 58) சென்னை, தமிழ்நாடு |
இறப்பிற்கான காரணம் | தீவிபத்து |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
மற்ற பெயர்கள் | இ. விஜயேந்திரன் |
அறியப்படுவது | நடிகர், எழுத்தாளர், கவிஞர் |
சிலோன் விஜயேந்திரன் என அழைக்கப்படும் இ. விஜயேந்திரன் (1946 - ஆகத்து 2004) ஈழத்து எழுத்தாளரும்,[1] கவிஞரும், நாடக, மற்றும் திரைப்படத் துணை நடிகரும் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
நடிப்பாற்றலில் சிறந்து விளங்கிய விஜயேந்திரன் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன் ஆவார். இவரது இயற்பெயர் ராஜேஸ்வரன்.[2] யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் பிறந்தவர்.[2] தந்தை சைவ சமயத்தவர், தாயார் மதுரையைச் சேர்ந்த கிறித்தவர், மனைவி இசுலாமியர். இவர் சில காலம் இசுலாமிய மதத்தினைத் தழுவி இசுலாமியராகவும் வாழ்ந்தார்.[3] கல்லடியாரைப் போலவே விஜயேந்திரனும் நினைத்தவுடன் கவி இயற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர்.
நடிப்பு[தொகு]
1960 இல் கோப்பாய் கலைவளர்ச்சிக் கழகம் மேடையேற்றிய "கட்டபொம்மன்' நாடகத்தில் முதன் முதலில் வில்லன் பாத்திரத்தில் நடித்தார்.[2] தொடர்ந்து காதலா கடமையா, மலர்ந்த வாழ்வு போன்ற பல மேடை நாடகங்களில் நடித்தார்.[2] இவரது முதல் திரைப்படம் பைலட் பிரேம்நாத். இதில் வில்லனாக நடித்தார்.[2] தமிழ்நாட்டில் வாழ்ந்தபோது கலையுலகத் தொடர்பினால் சிலோன் விஜயேந்திரன் என அழைக்கப்பட்டவர். நடிகர் சிவாஜி கணேசன் உட்பட முன்னணிக் கதாநாயகர்கள் பலருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 77 திரைப்படங்களில் துணை வேடங்களில் தோன்றியுள்ளார்.
எழுத்துத் துறை[தொகு]
சிலோன் விஜயேந்திரன் நடிப்புத் தொழிலை விட்டு எழுத்துத் துறைக்கு முழுமூச்சாக வந்தார். 1950களிலேயே எழுதத் தொடங்கிய இவர் ஏராளமான சிறுகதைகளையும், நாடகங்களையும், புதினங்களையும் எழுதியுள்ளார்.[2] இவர் எழுதிய வரலாற்று நூல்களில் "ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை" எனும் நூல் பெரிதும் பாராட்டுப் பெற்றது.[2] 'வைகறை', 'விஜயா', 'நடிகன்' ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] தமிழகத்தின் மூத்த பதிப்பகங்கள் ஆதரவு கொடுத்தன. கழகம், பாரி, மணிவாசகர், அல்லயன்ஸ், கண்ணதாசன், கலைஞன் என அவருக்குப் பலர் ஆதரவு கொடுத்தனர்[4]. கவிஞர் கம்பதாசனை ஆய்வு செய்து நூல்கள் எழுதினார்.
சிலோன் விஜயேந்திரன் இராஜீவ் காந்தி கொலை விசாரணை தொடர்பாகச் சைதாப்பேட்டைச் சிறையில் ஓராண்டைக் கழித்தவர்[4].
விபத்தில் இறப்பு[தொகு]
2004, ஆகத்து 26 வியாழக்கிழமை திருவல்லிக்கேணியில் இடம்பெற்ற ஒரு தீவிபத்தில் படுகாயமடைந்து[5], மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதே நாளில் தனது 58வது அகவையில் காலமானார்.[4][6][7]
எழுதிய நூல்கள்[தொகு]
- ஈழத்துக் கலை இலக்கிய நினைவுகள்
- விஜயேந்திரன் கவிதைகள் (1968)
- அவள் ( நாவல்) (1968)
- அண்ணா என்றொரு மானிடன் (1969)
- செளந்தர்ய பூஜை (சிறு கதைகள்)(1970)
- பிரேம தியானம் (வசன காவியம்) (1971)
- ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை (வரலாறு) (1973)
- விஜயேந்திரன் கதைகள் (1975)
- பாரதி வரலாற்று நாடகம் (1982)
- நேசக் குயில் (கவிதைகள்) (1984)
- உலக நடிகர்களும் நடிகமேதை சிவாஜியும் (1985)
- கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும் (1986)
- சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் (பாகம் 2) (1990)
- ஈழத்துக் கவிதை விமர்சனம் (1992)
- மூன்று கவிதைகள் (1993)
- சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் (பாகம் 3) (1994)
- இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களும் கவிதைகளும் (1994)
- அல்லாஹு அக்பர் (1996)
தொகுத்த நூல்கள்[தொகு]
- கல்லடிவேலன் நகைச்சுவை கதைகள் (1987)
- கம்பதாசன் கவிதைத் திரட்டு (1987)
- கம்பதாசன் திரை இசைப்பாடள்கள் (1987)
- கம்பதாசன் காவியஙள் (1987)
- கம்பதாசன் சிறுகதைகள் (1988)
- கம்பதாசன் நாடகங்கள் (1988)
- கம்பதாசன் கவிதா நுட்பங்கள் (1997)
- கலைஞர் திரை இசைப் பாடல்கள் (1988)
- ஈழத்துக் கவிதைக் கனிகள் (1990)
- அறுபது காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும் (1992)
நடித்த திரைப்படங்கள் சில[தொகு]
- பைலட் பிரேம்நாத் (1978)
- பொல்லாதவன் (1980)
- ஓசை (1984)
- ஏமாறாதே ஏமாற்றாதே
- கொலுசு
- எரிமலை
- லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
- மங்கம்மா சபதம் (1985)
- சிவப்பு நிலா (1985)
- புன்னகை மன்னன் (1986)
- பிரளய சிம்மன் (தெலுங்கு)
பட்டங்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Vijayēntiran̲, Cilōn̲ 1946-, Worldcat Idendities
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 தவபாலன், பா. (1979). "கலைஞர் கோட்டம்". செவ்வந்தி (யாழ்ப்பாணம்: செவ்வந்தி கலைக்கூடம்) (26): பக். 19-20. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_1979. பார்த்த நாள்: 2 பெப்ரவரி 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ வெளிவருகிறது 'காற்று வெளி'யின் இலக்கியப் பூக்கள் 2 (தொகுப்பு)!, பதிவு
- ↑ 4.0 4.1 4.2 கொழும்பில் மணிமேகலைப் பிரசுரப் புயல், மறவன்புலவு க. சச்சிதானந்தன், செப். 28, 2005
- ↑ தீ விபத்தில் காயமடைந்த நடிகர் விஜயேந்திரனுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம், தினமணி செய்தி, ஆகத்து 28, 2004
- ↑ Shop employee dies as petrol cans catch fire பரணிடப்பட்டது 2013-10-06 at the வந்தவழி இயந்திரம், த இந்து, ஆகத்து 27, 2004
- ↑ Tamil actor Vijayan killed in fire accident, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆகத்து 26, 2004