சிறையிருப்பு
Appearance
சிறையிருப்பு(Incarceration) என்பது தண்டனைக்காகவோ, அல்லது பாதுகாப்பிற்காகவோ குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைத்தலாகும். இதுவொருவகையான தண்டனையாகும். பொதுவாக சந்தேகத்தாலோ அல்லது உறுதிசெய்ததாலோ குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்நாட்டின் சட்டதிட்டத்தின் படி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். குற்றவியலில், சிறையிருப்பின் முக்கிய நான்கு நோக்கங்கள்:
- குற்றவாளியை தனிமைப்படுத்துவதன் மூலம் மேலும் குற்றங்கள் நடக்காமல் தடுத்தல்.
- குற்றம் செய்ததற்கான தண்டனை
- மற்றவர்களிடமிருந்து குற்றவாளியைக் காத்தல்
- குற்றவாளிகளுக்கு மறுவாழ்வளித்தல்
இந்தியாவில்
[தொகு]சிறைச்சாலைகளில் மிகக்குறைந்த சிறையிருப்புக் கைதிகள் கொண்ட நாடு இந்தியா,[2] 100,000 நபருக்கு 25 என்ற விகிதம். 2007ல் நாட்டின் மொத்த மக்கள் தொகை, 1,129,866,154[2] பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் எண்ணிக்கை 1,764,630 ஆகும்.[2] அதில் 236,313 வன்முறைகளும் 111,296 கொள்ளைகளுமாகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Human Development Report 2007/2008 - Prison population (per 100,000 people) பரணிடப்பட்டது 2009-02-12 at the வந்தவழி இயந்திரம். United Nations Development Programme.
- ↑ 2.0 2.1 2.2 ராய் வால்ம்ஸ்லியின் உலக கைதிகளின் பட்டியல், homeoffice.gov.uk பரணிடப்பட்டது 2009-03-25 at the வந்தவழி இயந்திரம்
- ↑ NationMaster - இந்திய குற்றங்களின் புள்ளிவிபரம்