உள்ளடக்கத்துக்குச் செல்

சிறும ஊதிய (நடுவண் அரசு) விதிகள், 1950

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறும ஊதிய (நடுவண் அரசு) விதிகள், 1950 என்பது சிறும ஊதியச் சட்டத்தின் பிரிவு 30 அடிப்படையில் இந்திய நடுவண் அரசால் அக்டோபர் 1950ல் இயற்றப்பட்ட விதிகளாகும்[1]. இதன் நான்காம் பெரும்பிரிவில் ஊதியம் அளித்தல், வேலை நேரம், விடுமுறை நாட்கள் குறித்த விதிகளும் ஐந்தாம் பெரும்பிரிவில் சட்டத்தின் கீழ் கோரப்படும் உரிமைகள் குறித்தும் விதிகள் உள்ளன[1].

ஆலோசனைக் குழுமம்

[தொகு]

இவ்விதிகள் குறித்த நடைமுறைகளுக்கும் சிறும ஊதியச் சட்டம் குறித்த அறிவுரைகளுக்கும் ஓர் நடுவண் ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டு இந்திய அரசிதழில் வெளியிடப்படுகின்றது. மேலும் சிறும ஊதிய ஆலோசனைக் குழுமம் ஒன்றும் அமைக்கப்படுகின்றது; தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அமைச்சர் இதன் தலைவராக நியமிக்கப்படுகிறார்[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "THE MINIMUM WAGES (CENTRAL) RULES, 1950" (PDF). labour.gov.in. Retrieved 22 சனவரி 2022.
  2. "4. Reconstitution of Minimum Wage Advisory Board : Notification No. S.O. 527(E)". Retrieved 22 சனவரி 2022.