சிறீஜா
சிறீஜா | |
---|---|
பிறப்பு | 18 ஏப்ரல் 1971 திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1989–1994 |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | சந்தான பாண்டியன் (தி. 1993) |
பிள்ளைகள் | 2 |
சிறீஜா (Sreeja) 1989 முதல் 1994 வரை மலையாளத் திரைப்படங்களில் தீவிரமாக நடித்த ஓர் இந்திய நடிகை ஆவார். மோகன்லாலின் நாயகியாக இந்திரஜாலம் (1990), செரிய லோகவும் வலிய மனுஷ்யரும் (1990) ஆகிய படங்களில் இவரது முக்கிய வேடங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.
இளமை
[தொகு]சிறீஜா நாடகக் கலைஞர்களான சிறீதரன் மற்றும் உஷா ஆகியோருக்கு மகளாக ஏப்ரல் 18, 1971 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியைத் திருவனந்தபுரத்தில் உள்ள கார்த்திகா திருநாள் அரசு மகளிர் தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். மேலும் இளங்கலைப் பட்டப்படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள என். எஸ். எஸ். மகளிர் கலைக் கல்லூரியில் பயின்றார். திரைத்துறையில் நுழைவதற்கு முன்பு தனது பெற்றோருடன் சில நாடகங்களில் நடித்துள்ளார்.
திரைத்துறையில்
[தொகு]சிறீஜா 1982-ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான நிதி மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதன் பிறகு இவர் தொடர்ந்து சிறிய வேடங்களில் நடித்தார். இவர் சாணக்கியன் (1989) படத்தில் கமலஹாசனுக்கும், மழவில்காவடி (1989) படத்தில் ஜெயராமுக்கும் சகோதரியாக நடித்தார். ஜெகதே சிறீகுமார் இயக்கிய முதல் படமான அன்னக்குட்டி கோடம்பாக்கம் விளக்குன்னு (1989) மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மோகன்லால் (இந்திரஜாலம்-1990) மற்றும் முகேஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சிறீஜா தன்னுடன் செவ்வந்தி திரைப்படத்தில் நடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தான பாண்டியனை மணந்தார். இந்தத் தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.[1]
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | Notes |
---|---|---|---|---|
1982 | நிதி | மலையாளம் | Child artist | |
1985 | முத்தாரம்குன்னு பி.ஓ. | மலையாளம் | ||
1987 | ஒரு மைமாச புலரியில் | மலையாளம் | ||
1988 | ஓர்மயில் ஒரு மணிநாடம் | மலையாளம் | ||
1989 | அன்னக்குட்டி கோடம்பாக்கம் விளக்குன்னு | அன்னக்குட்டி | மலையாளம் | |
1989 | மழவில்காவடி | விலாசினி | மலையாளம் | |
1989 | சாணக்கியன் | ஜான்சனின் சிசுட்டர் | மலையாளம் | |
1989 | ஜாக்ரதா | வந்தனா | மலையாளம் | |
1990 | டாக்டர் பசுபதி | உஷா | மலையாளம் | |
1990 | இந்திரஜாலம் | வினு | மலையாளம் | |
1990 | சாம்பியன் தாமசு | செலின் | மலையாளம் | |
1990 | மௌனம் சம்மதம் | விஜயலட்சுமி | தமிழ் | |
1990 | செறிய லோகவும் வலிய மனுஷ்யரும் | நீத்து | மலையாளம் | |
1991 | சேரன் பாண்டியன் | வெண்ணிலா | தமிழ் | |
1991 | எம். ஜி. ஆர். நகரில் | சகோ. ஜோசபின்/ரூபி பில்ப் | தமிழ் | |
1991 | தையல்காரன் | ஓமனா | தமிழ் | |
1991 | தெய்வசகாயம் லக்கி சென்டர் | சாலினி | மலையாளம் | |
1991 | குட்டபத்திரம் | செர்லி | மலையாளம் | |
1991 | எழுநல்லது | ஆஷா | மலையாளம் | |
1992 | காட்சிக்கப்புறம் | சௌதாமினி | மலையாளம் | |
1992 | முதல் குரல் | ரேகா | தமிழ் | |
1993 | கோசயாத்திரை | சஃபியா | மலையாளம் | |
1993 | தங்க பாப்பா | துளசி | தமிழ் | |
1994 | புருஷனை கைக்குள்ள போட்டுக்கணும் | சித்ரா | தமிழ் | |
1994 | செவ்வந்தி | செவ்வந்தி | தமிழ் | |
1994 | என் ராஜாங்கம் | கல்யாணி | தமிழ் |
தொலைக்காட்சி தொடர்கள்
[தொகு]- ஒரு பூ விரியுன்னு (தூர்தர்ஷன் )
- மனுஷ்யபந்தங்கள் (தூர்தர்ஷன்)
- கனகசிலங்கா
- இதிகாச கதைகள் (ராஜ் தொலைக்காட்சி) சகுந்தலாவாக