சிபோடாஸ் தாவரவியல் தோட்டம்
சிபோடாஸ் தாவரவியல் தோட்டம் | |
---|---|
Kebun Raya Cibodas | |
சிபோடாஸ் தாவரவியல் தோட்ட நுழைவாயில் | |
வகை | தாவரவியல் பூங்கா |
அமைவிடம் | சிமாசன் கிராமம் சியான்சூர் ரீஜன்சி, மேற்கு ஜாவா |
பரப்பளவு | 84.99 எக்டேர்கள் (210.0 ஏக்கர்கள்; 0.8499 km2) |
உருவாக்கம் | ஏப்ரல் 11, 1852 |
நிறுவனர் | ஜோகன்ஸ் எலியாஸ் தேய்ஸ்மான் |
இயக்குபவர் | இந்தோனேசிய அறிவியல் நிறுவனம் |
நிலை | Open |
இணையதளம் | krcibodas.lipi.go.id |
சிபோடாஸ் தாவரவியல் தோட்டம் (Cibodas Botanical Gardens) (இந்தோனேசிய மொழி: Kebun Raya Cibodas, KRC), இந்தோனேசியா மேற்கு ஜாவாவின் துணை மாவட்டமான சிபோடாஸ் பகுதியில், ஜெடே மலைச்சரிவில் 84.99 எக்டேர்கள் (210.0 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா ஆகும்.[1] இந்தத் தோட்டமானது இந்தோனேசிய அறிவியல் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது.
வரலாறு
[தொகு]இந்தத் தோட்டமானது 1852 ஆம் ஆண்டில் டச்சு தாவரவியலாளரான ஜோகன்ஸ் எலியாஸ் தேய்ஸ்மான் என்பவரால் போகோர் தாவரவியல் பூங்காவின் ஒரு கிளையாகத் துவக்கி வைக்கப்பட்டதாகும். பிந்தைய ஆண்டுகளில் ருடோல்ப் சேபேர் என்பவரால் இதற்கான திட்டம் வடிவமைத்து தரப்பட்டது.[2]
வளர்ச்சி
[தொகு]இதன் உயர்ந்த தோட்டங்கள் அதிகமான உயரத்தில் கட்டப்பட்டவை ஆகும். அதன் உயரம் காரணமாக துணை வெப்பமண்டல தாவரங்களின் வளர்ச்சி நல்ல நிலையில் காணப்படுகிறது.[2] இந்தத் தோட்டமானது சராசரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,300–1,425 மீட்டர் (4,265–4,675 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் சராசரி வெப்பநிலை 20.06 °C என்ற அளவில் காணப்படுகிறது. இதன் சராசரி ஈரப்பதம் 80.82% ஆக இருக்கிறது. இந்தோனேசியாவில் குயினின் உற்பத்தி செய்வதற்காக சின்கோனா மரங்கள் 1854 ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தத் தோட்டங்களில் வளர்க்கப்பட்டன. இந்த மரங்களானவை முதன்முதலாக ஜுட்டஸ் கார்ல் கல்கர்ல் என்பவரால் தென் அமெரிக்காவிலிருந்து ஜாவாவிற்குக் கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த மரங்களை வைத்து சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[3] இந்தோனேசியாவின் சிறந்த தாவரங்களான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த யூகலிப்டஸ், ஐரோப்பாவைச் கானிபர் வகைத் தாவரங்கள் மற்றும் பிற தாவரங்கள் இந்தப் பகுதியில் பயிரிடப்படுகின்றன.[4]
செடிகள், மரங்கள்
[தொகு]இந்த தோட்டத்தில் சுமார் 10,792 வகையான மரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றுள் 320 மலர்க்குடும்பத்தைச் சேர்ந்த ஆர்சைட்ஸ், 289 கற்றாழை வகையைச் சேர்ந்த சட்சி, 22 சதைப்பற்றுள்ள வகையைச் சேர்ந்த சக்குலண்ட் செடிகள், 216 அல்கா, 103 பன்னம், and 1162 தோட்டச் செடி வகைகள் காணப்படுகின்றன. அவை இந்த தாவரவியல் தோட்ட வளாகத்தின் பகுதிக்குள் வளர்கின்ற செடி வகைகளாகும். இங்குள்ள செடி வகைகளில் 114 செடி வகைகள் மட்டுமே மேற்கு ஜாவாவிற்குச் சொந்தமானதாகும். இங்குள்ள உலர் தாவரகம் என்ற நிலையில் தோராயமாக 4,852 பாதுகாக்கப்பட்ட மாதிரி செடி வகைகள் காணப்படுகின்றன.[5]
இங்குள்ள தாவரங்கள் உட்புறம் மற்றும் வெளிப்புறம் வளர்பவை என்று இரு வகையில் அமைந்துள்ளன. உட்புறத் தாவரங்கள் என்ற நிலையில் உள்ளவற்றில் கற்றாழை வகையைச் சேர்ந்த சட்சி மற்றும் ஆர்சைட்ஸ் போன்றவை கண்ணாடிக்கூண்டுகளில் வளர்க்கப்படுகின்றன. வெளியே வளர்பவை செர்ரி பிளாசம் வகையைச் சேர்ந்த சகுரா செடித் தோட்டம், அல்கா தோட்டம், ரோடோடென்டிரான் தோட்டம், பெர்ன் தோட்டம், மற்றும் மருத்துவத் தோட்டம் என்ற வகைகளில் தனித்தனியாக அமைந்துள்ளன.[6]
ஏப்ரல் 2014 இல் இந்த தாவரவியல் தோட்டம் ஒரு புதிய பிரிவினைத் தொடங்கியது. அது கெண்டி (தாவரம்) இல்லம் (Rumah Kantung Semar) என அழைக்கப்படுகிறது. அப்பிரிவில் 55 இனங்கள் மற்றும் 47 கலப்பு இனங்களும் உள்ளன. அவற்றுள் கெபென்தேஸ் வகையைச் சார்ந்தவையும் சேரும்.[7]
படத்தொகுப்பு
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Farah Fitriani, 'See the World in Cibodas Botanical Garden' பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் on the Good news from Indonesia website, posted 11 January 2011.
- ↑ 2.0 2.1 Sejarah Cibodas பரணிடப்பட்டது 2015-02-17 at the வந்தவழி இயந்திரம், krcibodas.lipi.go.id
- ↑ Audrey Kahin; R. B. Cribb (2004). Historical Dictionary of Indonesia. Scarecrow Press. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810849358. பார்க்கப்பட்ட நாள் February 26, 2015.
- ↑ http://www.jtrolis.ub.ac.id/index.php/jtrolis/article/viewFile/100/122
- ↑ Kebun Raya Cibodas பரணிடப்பட்டது 2017-07-04 at the வந்தவழி இயந்திரம், disparbud.jabarprov.go.id
- ↑ Kebun Raya Cibodas Wahana Wisata dan Penelitian பரணிடப்பட்டது 2019-11-23 at the வந்தவழி இயந்திரம் , Koran Jakarta, 14 February 2015.
- ↑ "Archived copy". Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 2015-02-18.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
வெளி இணைப்புகள்
[தொகு]