உள்ளடக்கத்துக்குச் செல்

சின்னமைல் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னமைல் அசிடேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-பினைல்புரோப்-2-யீனைல் அசிடேட்டு
வேறு பெயர்கள்
சின்னமைல் அசிடேட்டு; 3-பினைல்புரோப்-2-யீன்-1-ஐல் அசிடேட்டு; 3-பினைல்அல்லைலல் அசிடேட்டு;[1] 1-அசிட்டாக்சி-3-பினைல்-2-புரோப்பீன்[2]
இனங்காட்டிகள்
103-54-8 அனைத்து மாற்றியங்கள் Y
ChEBI CHEBI:31402 Y
ChemSpider 7377 Y
EC number 203-121-9
InChI
  • InChI=1S/C11H12O2/c1-10(12)13-9-5-8-11-6-3-2-4-7-11/h2-8H,9H2,1H3/b8-5+ Y
    Key: WJSDHUCWMSHDCR-VMPITWQZSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C12299 Y
பப்கெம் 5282110
வே.ந.வி.ப எண் GE2275000
  • CC(=O)OC/C=C/c1ccccc1
UNII LFJ36XSV8K Y
பண்புகள்
C11H12O2
வாய்ப்பாட்டு எடை 176.22 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
மணம் இனிமையான, மலரின் நறுமணம்[3]
அடர்த்தி 1.057 கி/மிலி[4]
கொதிநிலை 265 °C (509 °F; 538 K)[3]
212.3 மிகி/லி
மட. P 2.85[5]
ஆவியமுக்கம் 0.008 மிமீ பாதரச அழுத்தம் (20°செல்சியசு)[1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.539 - 1.543[3]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் கண்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது, தோலில் படும்போது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்[6]
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[6]
GHS signal word Warning[6]
H317, H319[6]
P261, P264, P272, P280, P302+352, P305+351+338, P321, P333+313, P337+313, P363, P501[6]
தீப்பற்றும் வெப்பநிலை 103–113 °C (217–235 °F; 376–386 K)[3][7]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சின்னமைல் அசிட்டேட்டு (Cinnamyl Acetate) என்பது C11H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 3-பீனைல்புரோப்-2- யீனைல் அசிட்டேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் சின்னமைல் எசுத்தர் குடும்பத்தின் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். மாறுபடும் ஆல்கைல் குழு இங்கு ஒரு மெத்தில் குழுவால் மாற்றப்படுகிறது. அரோமேடிக் தன்மையற்ற கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்பு தோன்றுவதன் விளைவாக, சின்னமைல் அசிட்டேட்டு இசட் மற்றும் ஈ மாற்றிய அமைப்பைக் கொண்டிருக்கலாம்.[8].

சின்னமைல் எசுத்தர்
(ஈ) மற்றும் (இசட்) சின்னமைல் அசிட்டேட்டின் மாற்றியன்கள்.

புதிய இலவங்கப்பட்டையில் சின்னமைல் அசிட்டேட்டு இயற்கையில் தோன்றுகிறது. இதில் சின்னமைல் அசிட்டேட்டின் செறிவு மில்லியனுக்கு 2800 முதல் 51000 பகுதிகள் என்ற அளவில் இருக்கிறது[9]. சின்னமைல் அசிட்டேட்டு ரொட்டி தயாரித்தலின் போது பயன்படுத்தப்படும் வாசனை எசுத்தராகும். எடுத்துக்காட்டாக, ரொட்டி மற்றும் விலங்குத் தீவனம் போன்றவற்றிற்கு இனிமையான பழ வாசனையைத் தருகிறது. மேலும், இது பல அழகுசாதனப் பொருட்களிலும், சில கழிப்பறை பயன்பாடுகளிலும், தூய்மையாக்கிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.[8].

தயாரிப்பு

[தொகு]

அசிட்டிக் அமிலத்துடன் சின்னமைல் ஆல்ககால் முறையாக ஒடுக்கப்படுவதன் விளைவாக தயாரிக்கப்படுகிறது.

சட்டம் மற்றும் கட்டுப்பாடு

[தொகு]

சின்னமைல் அசிடேட்டு, வாசனை திரவியங்களிலும் உணவிற்கான சுவை மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது பல நிறுவனங்களால் விவாதிக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டில், ஃப்ளேவர் அண்ட் எக்ஸ்ட்ராக்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் ( ஃபெமா ) இந்த சேர்மத்தைப் பொதுவான, பாதுகப்பான சுவையூட்டும் மூலப்பொருளாக அங்கீகரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டது. பாதுகாப்பானது என்று கருதப்பட்ட பல தயாரிப்புகளில் சராசரி அதிகபட்ச பயன்பாட்டு நிலைகளை சங்கம் தீர்மானித்தது: [10]

உற்பத்தி மற்றும் உட்கொள்ளல்

[தொகு]

சின்னமைல் அசிடேட்டின் சராசரி ஆண்டு உற்பத்தி மற்றும் வாசனைப் பொருளாக சின்னமைல் அசிடேட்டின் தினசரி உட்கொள்ளல் உலக சுகாதார அமைப்பினால் அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, ஐரோப்பாவில் இதன் ஆண்டு உற்பத்தி 1498 கிகி மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 2255 கிகி என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சேர்மத்தின் தினசரி உட்கொள்ளல் அளவு ஐரோப்பாவில் 210 மைக்ரோ கிராம் ஆகவும், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 300 மைக்ரோ கிராமாகவும் மதிப்பிப்பட்டுள்ளது. ஐரோப்பியர்களுக்கு உடல் எடையின் படியான உட்கொள்ளலானது 4 மைக்கரோகிராம்/கிகி ஆகவும் அமெரிக்கர்களுக்கு 5 மைக்ரோகிராம்/கிகி ஆகவும் உள்ளது.[11]

தொகுப்பு முறை தயாரிப்பு

[தொகு]

சின்னமைல் அசிடேட்டு இயற்கையாகவே தாவரங்களில் காணப்படுவதால், அதைப் பிரித்தெடுத்து சுத்திகரிக்கலாம். இருப்பினும், இது குறைந்த அளவு விளைச்சலைக் கொண்டுள்ளதால், எனவே உற்பத்தி செலவுகள் அதிகமாகும். வேதி முறைகளைப் பயன்படுத்துவது சின்னமைல் அசிடேட்டு தயாரிக்க மிகவும் திறன் வாய்ந்த உத்திகளை வழங்க முடியும்.

சின்னமைல் அசிடேட்டு 2 ஐத் தயாரிக்க பலவிதமான முறைகள் உள்ளன'. இவற்றில் ஒரு வழி சின்னமைல் ஆல்ககால் 1 மற்றும் வினைல் அசிடேட்டு ஆகியவற்றில் இருந்து தயாரிப்பதாகும். இந்த வினையானது எசுத்தர் பிணைப்பின் மீது குறிப்பான வினையைக் கொண்ட லைப்பேசு வகையைச் சார்ந்த மூஅசைல்கிளிசெரால் எசுத்தர் ஐதரோலேசு என்ற நொதியால் வினையூக்கம் செய்யப்படுகிறது. இந்த வினையின் துணை விளைபொருளானது அசிட்டால்டிகைடாகும். இந்த வினையின் சமன்பாடானது:[12]

அசிட்டால்டிகைடானது தொகுப்பு முறைத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் லைப்பேசின் மீது ஒரு விரும்பத்தகாத செயலிழக்கச் செய்யும் விளைவைக் கொண்டிருப்பதால், வினைல் அசிட்டேட்டிற்குப் பதிலாக எத்தில் அசிட்டேட்டு பயன்படுத்தப்படலாம். இந்த பதிலீட்டு எசுத்தராக்குதல் வினையில் சின்னமைல் ஆல்ககால் 1 உடன் எத்தில் அசிட்டேட்டு வினைபுரிந்து சின்னமைல் அசிட்டேட்டு 2 மற்றும் எத்தனாலைத் தருகிறது. இந்த தொகுப்பு முறைக்கு லைப்பேசு நோவோசிம் 435 தேவைப்படுகிறது, மேலும் இந்த தொகுப்பு முறையானது கரைப்பான் அற்ற அமைப்பில் நிகழ்த்தப்படுகிறது. இந்த வினையானது பின்வருமாறு:

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Fragrance material review on cinnamyl acetate". Food and Chemical Toxicology 45 Suppl 1 (1): S53–7. 2007-01-01. doi:10.1016/j.fct.2007.09.012. பப்மெட்:18031892. 
  2. "Acetic acid, cinnamyl ester". webbook.nist.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
  3. 3.0 3.1 3.2 3.3 MATERIAL SAFETY DATA SHEET ELAN CHEMICAL COMPANY, INC - Cinnamyl acetate. Date updated: November 30, 2005.
  4. "103-54-8 CAS MSDS (Cinnamyl acetate) Melting Point Boiling Point Density CAS Chemical Properties". www.chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
  5. "A toxicologic and dermatologic assessment of related esters and alcohols of cinnamic acid and cinnamyl alcohol when used as fragrance ingredients". Food and Chemical Toxicology 45 Suppl 1: S1–23. 2007. doi:10.1016/j.fct.2007.09.087. பப்மெட்:18035463. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Pubchem. "Cinnamyl acetate". pubchem.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-03-23.
  7. "Cinnamyl acetate 166170". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2018-03-23.
  8. 8.0 8.1 Luebke, William (2018-01-31). "cinnamyl acetate, 103-54-8". www.thegoodscentscompany.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-23.
  9. "Whole-Cell Biocatalytic Synthesis of Cinnamyl Acetate with a Novel Esterase from the DNA Library of Acinetobacter hemolyticus". Journal of Agricultural and Food Chemistry 65 (10): 2120–2128. March 2017. doi:10.1021/acs.jafc.6b05799. பப்மெட்:28220703. 
  10. Hall, Richard (1965). III. GRAS Substances. USA: The Garrard Press.
  11. "CINNAMYL ALCOHOL AND RELATED SUBSTANCES". www.inchem.org. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
  12. Cai, Xianghai; Wang, Wei; Lin, Lin; He, Dannong; Shen, Yaling; Wei, Wei; Wei, Dong-zhi (2017-04-01). "Cinnamyl Esters Synthesis By Lipase-Catalyzed Transesterification in a Non-Aqueous System". Catalysis Letters 147 (4): 946–952. doi:10.1007/s10562-017-1994-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னமைல்_அசிட்டேட்டு&oldid=2885831" இலிருந்து மீள்விக்கப்பட்டது