சின்னப்பூ
Appearance
சின்னப்பூ என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் அரசுக்கு உரிய பத்து உறுப்புக்களாகும் அவற்றின் சிறப்புத் தோன்ற நுறு, தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது பாடல்களால் பாடுவது சின்னப்பூ ஆகும்[1]. சின்னப்பூ சிற்றிலக்கியம் அரசர்களைப் பாடுவதற்கே உகந்தது[2].
வேந்தருடைய சின்னங்களைப் பற்றிய சிற்றிலக்கியம் ஆதலால் இது சின்னப்பூ எனப் பெயர் பெற்றது. இதே கருப்பொருளைக் கொண்டு பத்துப் பாடல்களில் பாடப்படும் சிற்றிலக்கியம் தசாங்கப்பத்து எனப்படும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ நவநீதப் பாட்டியல், பாடல் 40
- ↑ எஸ். கலியாண சுந்தரையர், எஸ். ஜி. கணபதி ஐயர் ஆகியோரது நவநீதப் பாட்டியல் பதிப்பில், 40 ஆம் பாடலின் விளக்கத்துக்கு முள்ளியார் கவித்தொகையில் இருந்து மேற்கோள்.
உசாத்துணைகள்
[தொகு]- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம் பரணிடப்பட்டது 2010-07-16 at the வந்தவழி இயந்திரம்