சித்தானந்த சுவாமிகள்
சித்தானந்த சுவாமிகள் என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தராவார்.[1] இவர் காரைக்கால் மாவட்டம் அக்கரைவட்டம் கிராமத்தில் இவரது சமாதியடைந்துள்ளார். அங்குள்ள சௌந்தரியவல்லி உடனுறை சோமநாதர் கோயிலின் மரத்தடியில் இவர் சமாதியடைந்தார். எனவே தற்போது அங்கு சமாதிக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இவர் செங்குந்தர் மரபை சேர்ந்தவர்.[2]
இவர் சித்துகளை செய்வதில் வல்லவராகவும், சித்துகளை ஆனந்தமாக செய்வதாலும் சித்தானந்த சாமிகள் என்று அழைத்தனர். சித்தானந்தர் கடலூரில் பிறந்தவர். இவர் புதுவையில் முத்தையால்பேட்டையில் வாழ்ந்து வந்த முத்துக்குமாரசாமிப் பிள்ளையின் மனைவியின் கடுமையான வயிற்று வலியை நீக்கினார். அவர்களின் கோரிக்கைப்படி அவர்களின் வீட்டில் வசித்தார்.
முத்தையா முதலியார் என்பவர் சித்தர் மேல் மிகப்பற்றுடன் இருந்தார். அவருடைய மனைவி சித்தானந்தரை தன்னுடைய மகனைப் போல பாவித்து பசியைப் போக்க உணவளித்து வந்தார்.
இவருக்கு ஆவணி மாதத்தில் குருபூசை நடத்தப்படுகிறது.
புதுச்சேரி மாவட்டம் கருவடிக்குப்பத்தில் இவருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.[3]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ சித்தர் சித்தானந்த சுவாமிகள் குருபூஜை 27 August 2012 தினமணி
- ↑ 19வது செங்குந்தர் சங்க மாநாடு மலர்
- ↑ குரு சித்தானந்த சுவாமிகள் கோயில் மகா கும்பாபிஷேகம் தினமணி 30 January 2016
வெளி இணைப்புகள்
[தொகு]நக்கீரன் - புதுச்சேரி தந்த அற்புதச் சித்தர்[தொடர்பிழந்த இணைப்பு]