சிதறிய கதிர்வீச்சு
Appearance

சிதறிய கதிர்வீச்சு (scattered radiation) என்பது மருத்துவத்திற்காகவும் கதிர் படம் எடுக்கும் போதும் முதன்மைக் கதிர்வீச்சானது நோயாளி அல்லது பிற பொருட்களின் மீது விழும் போது அவை சிதறடிக்கப்பட்டு எல்லாத் திசைகளிலும் கதிர்கள் சிதறுவதைக் குறிக்கிறது. இவ்வாறு சிதறும் கதிர்வீச்சின் ஆற்றல் முதன்மைக் கதிர்வீச்சின் ஒரு விழுக்காடுதான் என்றாலும் இதனைக் கட்டுப்படுத்த வேண்டுவது மிகவும் அவசியமானதாகும்.