சிண்டி ஆர்லெட் கான்ட்ரெராஸ் பாடிஸ்டா
சிண்டி ஆர்லெட் கான்ட்ரெராஸ் பாடிஸ்டா (Cindy Arlette Contreras Bautista) (பிறப்பு: 1990 சூன் 26) [1] இவர் பெருவியன் வழக்கறிஞரும் மற்றும் பெண்களுக்கான வழக்கறிஞருமாவார். இவர் ஒரு சர்வதேச வீரதீர பெண்கள் விருது பெற்றுள்ளார்.[2], மேலும் "டைம்" இதழின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டார்.[3]
தாக்குதல் சம்பவம்
[தொகு]2015 சூலை 15 அன்று அயாகுச்சோவில் உள்ள ஒரு விடுதியில் இவரது அப்போதைய காதலன் அட்ரியானோ போசோ அரியாஸ் தாக்கப்பட்டதை அறிந்து அங்கே சென்றார். பாதுகாப்பு கேமராக்கள் இவர் தலைமுடியால் இழுத்துச் செல்லப்படுவதை பதிவு செய்தன.[4] இந்த தாக்குதலால் இவரது ஒரு கால் சேதமடைந்தது. பின்னர் இவர் நடப்பதற்கு ஒரு ஊன்றுகோல் பயன்படுத்த வேண்டியது அவசியமானது.[5] கான்ட்ரெராஸ் தனது நீதிக்கான கோரிக்கையை பொதுவெளியில் சென்றார். மேலும் தனது வழக்கை ஊடகங்களில் எழுதினார்.
இவர் மீதான தாக்குதல் நடத்தியவனுக்கு எதிரான சான்றுகள் தண்டனைக்கு போதுமானதாக இருந்தன. ஆனால் மூன்று நீதிபதிகள் குழு 2016 சூலையில் சந்தேகமான தீர்ப்பினை வழங்கியது.[3][6] இவருக்கு எதிரான வன்முறை மற்றும் சிகிச்சையானது நாடு தழுவிய நியுனாமெனோஸ் இயக்கத்திற்கு ஒரு அணிவகுப்பு புள்ளியாக மாறியது. லிமாவில் நடந்த அணிவகுப்பு பெருவில் நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் என்று கூறப்பட்டது.[7] 2016 நவம்பரில், அயாகுச்சோ உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த தண்டனையை நிராகரித்து, பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்ணை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் புதிய வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டது.[8] 20196 சூலை 8 அன்று, குற்றவாளி இவரை கொலை செய்ய முயன்றதற்காக 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் கற்பழிப்பு முயற்சியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.[9]
அங்கீகாரம்
[தொகு]2017ஆம் ஆண்டில் கான்ட்ரெராஸின் வாதத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அங்கீகரித்தது. இவர் வாஷிங்டனில் தலா ஒரு சர்வதேச வீரதீர பெண்கள் விருதப் பெற பன்னிரண்டு பேருடன் இவரையும் தேர்ந்தெடுத்தது. டைம் பத்திரிகையின் 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலிலும் இவர் ஒரு "குறியீடாக" தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] மேலும், 2018இல் பிபிசியின் 100 பெண்களின் ஒரு பகுதியாகவும் பட்டியலிடப்பட்டார்.[10]
குறிப்புகள்
[தொகு]- ↑ "BBC 100 Women 2018: Who is on the list?" (in en-GB). https://www.bbc.com/news/world-46225037.
- ↑ "Biographies of the Finalists for the 2017 International Women of Courage Awards". www.state.gov (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-03-29. பார்க்கப்பட்ட நாள் 2017-08-16.
- ↑ 3.0 3.1 3.2 "Cindy Arlette Contreras Bautista: The World's 100 Most Influential People". Time. பார்க்கப்பட்ட நாள் 2017-08-16.
- ↑ "Minuto a minuto de la agresión de Adriano Pozo a Cindy Contreras". Frecuencia Latina. July 19, 2015. பார்க்கப்பட்ட நாள் August 13, 2016.
- ↑ Beatríz Pascual Macías (29 March 2017). "Arlette Contreras, la mujer que venció al dolor y lucha contra los femicidios". El País. பார்க்கப்பட்ட நாள் 23 August 2017.
- ↑ "Corte Superior de Justicia de Ayacucho, Juzgado Penal Colegiado de Huamanga. Expediente 01641-2015-0501-JR-PE-01. Sentencia" (in Spanish). 2016. பார்க்கப்பட்ட நாள் August 13, 2016.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "El Perú de pie contra la violencia de género". Diario UNO (in Spanish). August 14, 2016. Archived from the original on அக்டோபர் 21, 2016. பார்க்கப்பட்ட நாள் August 14, 2016.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Caso Arlette Contreras: declaran nula sentencia contra Adriano Pozo, Con la finalidad de que se inicie un nuevo proceso que incluya los delitos de violación e intento de feminicidio". Exitosa. 18 November 2016. Archived from the original on 24 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 23 August 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ cite web|title=Caso Arlette Contreras: sentencian a 11 años de prisión a Adriano Pozo|url=https://elcomercio.pe/lima/judiciales/caso-arlette-contreras-sentencian-11-anos-prision-adriano-pozo-tentativa-feminicidio-noticia-ecpm-653524%7Cwork=El Comercio (Peru)|date=8 July 2019|accessdate=8 July 2019}}
- ↑ "BBC 100 Women 2018: Who is on the list?". https://www.bbc.com/news/world-46225037.