சிடெய்ன்மெட்சைட்டு
Appearance
சிடெய்ன்மெட்சைட்டு Steinmetzite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பாசுப்பேட்டுக் கனிமம் |
வேதி வாய்பாடு | Zn2Fe(PO4)2(OH)•3H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | முச்சரிவச்சு |
மேற்கோள்கள் | [1][2] |
சிடெய்ன்மெட்சைட்டு (Steinmetzite) என்பது Zn2Fe(PO4)2(OH)•3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இதுவோர் அரிய பாசுப்பேட்டுக் கனிமமாகும். செருமனி நாட்டின் ஏகன்டார்ஃப்பில் கிடைத்த தீப்பாறைகளில் சிடெய்ன்மெட்சைட்டு கண்டறியப்பட்டது.[1][2] அரிய பாசுப்பேட்டுக் கனிமங்களுக்கு இவை பெயர்பெற்றவையாகும்.[3] வேதியியல் ரீதியாக பாசுபோபைலைட்டு கனிமமும் துத்தநாக இரும்பு பாசுப்பேட்டும் சிடெய்ன்மெட்சைட்டுடன் தொடர்பு கொண்டுள்ளன. இவற்றின் பெயர் முறையே பிளிமெரைட்டு, சின்கிளிப்சுகோம்பைட்டு என்பனவாகும்.[4][5]
P1 என்ற இடக்குழுவில் முச்சாய்வுப் படிக அமைப்பில் சிடெய்ன்மெட்சைட்டு படிகமாகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிடெய்ன்மெட்சைட்டு கனிமத்தை Snm[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Grey, I.E., Keck, E., Kampf, A.R., Mumme, W.G., MacRae, C.M., Gable, R.W., Glenn, A.M., and Davidson, C.J., 2015. Steinmetzite, IMA 2015-081. CNMNC Newsletter No. 28, December 2015, 1863; Mineralogical Magazine 79, 1859–1864
- ↑ 2.0 2.1 "Steinmetzite: Steinmetizte mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
- ↑ "Hagendorf South Pegmatite (Cornelia Mine; Hagendorf South Open Cut), Hagendorf, Waidhaus, Upper Palatinate, Bavaria, Germany - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
- ↑ "Plimerite: Plimeite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
- ↑ "Zinclipscombite: Zinclipscombite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.