சிங்கோலிவெனைட்டு
Appearance
சிங்கோலிவெனைட்டு Zincolivenite | |
---|---|
கிரீசு நாட்டு லாவ்ரியம் நகர சுரங்கத்தில் கிடைத்த சிங்கோலிவெனைட்டு கனிமம். | |
பொதுவானாவை | |
வகை | Arsenate mineral |
வேதி வாய்பாடு | CuZn(AsO4)(OH) |
இனங்காணல் | |
நிறம் | பச்சை, பசும்நீலம் |
படிக இயல்பு | பட்டகப் படிகங்கள், கதிர் உமிழும் |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
பிளப்பு | {010} இல் நிறைவு, {101} இல் குறைவு |
முறிவு | சங்குருவம் |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 3.5 |
மிளிர்வு | கண்ணாடி போன்றது |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 4.33 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.736(2) nβ = 1.784(2) nγ = 1.788(2) |
இரட்டை ஒளிவிலகல் | 0.052 |
பலதிசை வண்ணப்படிகமை | பலவீன X = இளம் நீலப்பச்சை, Y = Z = இலேசான நீலம் |
2V கோணம் | அளவிடப்பட்டது: 30° |
நிறப்பிரிகை | r > v, வலிமையானது |
Extinction | இணை மறைவு |
மேற்கோள்கள் | [1][2] |
சிங்கோலிவெனைட்டு (Zincolivenite) என்பது CuZn(AsO4)(OH) என்ற வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வகை கனிமமாகும். இக்கனிமத்தை தாமிர துத்தநாக ஆர்சனேட்டு கனிமமாக கருதுகிறார்கள். ஓலிவெனைட்டு குழுவைச் சேர்ந்த கனிமங்களில் ஒன்றாக இதை வகைப்படுத்துகிறார்கள். பச்சை நிறம் அல்லது நீல நிறத்தைக் கொண்டதாக இக்கனிமம் காணப்படுகிறது. துத்தநாகமும் ஓலிவெனைட்டும் சேர்ந்து உருவாவதால் இதற்கு இப்பெயர் சூட்டப்படுகிறது[1].
கிரீசு நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க அட்டிகா பகுதியில் அமைந்திருக்கும் லாவ்ரியம் மாவட்டத்தில் உள்ள லாவ்ரியம் நகர சுரங்கத்தில் இக்கனிமம் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அனைத்துலக கனிமவியலாளர்கள் கூட்டமைப்பும் இதை 2006 ஆம் ஆண்டில் அங்கீகரித்துள்ளது[1].