சாற்றுக்கவி
Appearance
சாற்றுக்கவி என்பது முந்தைய காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதையாகும். வள்ளலார் என அழைக்கப் பெற்ற இராமலிங்க அடிகளாரிடம் பலர் சாற்றுக்கவிகளைப் பெற்றுள்ளனர். இவற்றுள் முத்துக்கிருஷ்ண பிரமம் எழுதிய நீட்டானுபூதி உரை, மதுரை ஆதீனம் சிதம்பர சுவாமிகள் பதிப்பித்த சிதம்பர புராணப் பதிப்பு, மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளையின் நீதி நூல் போன்றவற்றிற்கு சாற்றுக்கவிகள் குறிப்பிடத்தக்கவையாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ திரு அருட்பிரகாச வள்ளலார் எழுதிய திருஅருட்பா முதல் ஐந்து திருமுறைகள் நூல் பக்கம் - 28 & 29