உள்ளடக்கத்துக்குச் செல்

சார்ஜ்பீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சார்ஜ்பீ (Chargebee) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட ஒரு சேவையாக மென்பொருள் நிறுவனமாகும். இது 2011 ஆம் ஆண்டு கிரிஷ் சுப்பிரமணியன், ராஜாராமன், பேபி சரவணன், தியாகு ஆகிய நான்கு நண்பர்களால் சென்னையில் துவக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டுவாக்கில் இந்நிறுவனத்தின் மதிப்பு 3.50 பில்லியன் டாலர் (30,000 கோடி) ஆகும். சப்ஸ்கிரிப்சன், வருவாய் மேலாண்மை தொடர்பான மென்பொருட்களை வழங்கு இந்த நிறுவனம் தற்போது நெதர்லாந்து தலைநகரான ஆம்ஸ்டர்டமை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. நிறுவனத்தில் 2024 வாக்கில் சுமார் 400 பேர் பணிபுரிகின்றனர்.


2011 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் சென்னையில் துவக்கப்பட்டு பெரும் வளர்ச்சி கண்டது. இதன் வாடிக்கையாளர்களில் 99% ஐரோப்பா, அமெரிக்காவைச் செர்ந்தவர்களாவர். நிறுவனம் துவக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆன நிலையில், நிறுவனத்தை வாடிக்கையாளர்களுக்கு அருகில் நிறுவனத்தைக் கொண்டு செல்ல முடிவெடுத்தனர். இதனால் இதன் தலைமையகத்தை ஆம்ஸ்டர்டாமுக்கு மாற்றப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஜாலியாக ஆரம்பித்த ஸ்டார்ட்அப் ரூ.30,000 கோடி மதிப்புமிக்க நிறுவனமாக மாறிய கதை - Chargebee சிஇஓ கிரிஷ் சுப்ரமணியன் பேட்டி". Hindu Tamil Thisai. 2024-07-22. பார்க்கப்பட்ட நாள் 2024-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ஜ்பீ&oldid=4131259" இலிருந்து மீள்விக்கப்பட்டது