சாருபாலா தொண்டைமான்
ராணி சாருபாலா ராஜம்மணி ஆயி சாஹிப் (Rani Sarubala Rajammani Ayi Sahib) என்கிற பெயரால் அறியப்படும் மேயர் சாருபாலா தொண்டைமான் ஒரு இந்திய அரசியல்வாதியும், புதுக்கோட்டை அரச குடும்ப உறுப்பினரும் ஆவார். அமமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ளார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் நகரத்தந்தையாக இரண்டு முறை (2001 மற்றும் 2005) தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்[1] to 2009.[2] , திருச்சி அலகு தமிழ் மாநில காங்கிரசு தலைவராக சிறிது காலம் இருந்தார். அவர் தமிழ் மாநில காங்கிரசிலிருந்து விலகி, 15 செப்டம்பர் 2016 அன்று அதிமுகவில் ஜெ. ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார்.[3] ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சி இரண்டாக பிளவுபட்ட பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக அமைப்பு செயலாளர் மற்றும் திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக பணியாற்றினார்.
இவர் திருச்சி மாநகராட்சிக்கு 2001 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை நகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தொடக்க காலத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இருந்த இவர், இடையில் திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தார். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அ.இ.அதிமுக கட்சியில் ஜெ. ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]சாருபாலா 1958 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பிறந்தார்.[4] இவர் தத்துவயியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். புதுக்கோட்டை அரச குடும்ப விளையாட்டுச் சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் துணைத் தலைவருமான புதுக்கோட்டை அரச இல்லத்தின் தற்போதைய தலைவருமான இரா. ராஜகோபால தொண்டைமானை மணந்தார். இவர்களுக்கு ரா. பிருத்விராஜ் தொண்டைமான் என்ற மகனும், ரா. ராதா நிரஞ்சனி என்ற மகளும் உள்ளனர்.
அரசியல்
[தொகு]2009 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களின் போது, திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ப. குமாரிடம் முறையே 4,335 வாக்குகள் மற்றும் 1,00,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பின்னர் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ganesan, S. (29 October 2001). "Charubala faces uphill task in Tiruchi". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140502154932/http://www.hindu.com/2001/10/29/stories/04292236.htm.
- ↑ "S. Sujatha elected as Trichy mayor". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 6 June 2009 இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125202026/http://www.hindustantimes.com/S-Sujatha-elected-as-Trichy-Mayor/Article1-417447.aspx.
- ↑ "Sarubala joins AIADMK". The Hindu. 15 September 2016. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/Sarubala-joins-AIADMK/article14638898.ece?ref=tpnews. பார்த்த நாள்: 25 June 2018.
- ↑ "Ramasundaram to retire voluntarily" (in en-IN). The Hindu. 2010-11-26. https://www.thehindu.com/news/national/tamil-nadu/Ramasundaram-to-retire-voluntarily/article15717186.ece.
- ↑ "=List of Candidates in TIRUCHIRAPPALLI _ TAMIL NADU Lok Sabha 2019.html". MyNeta.info. 18 July 2020. http://myneta.info/LokSabha2019/index.php?action=show_candidates&constituency_id=830. பார்த்த நாள்: 18 July 2020.