சாரா தட்டில்
சாரா தட்டில் Sarah Tuttle | |
---|---|
பணியிடங்கள் | வாழ்சிங்டன் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாந்தா குரூசு கொலம்பியா பல்கலைக்கழகம் |
சாரா தட்டில் (Sarah Tuttle) வாழ்சிங்டன் பல்கலைக்கழக வானியற்பியல் பேராசிரிரும் அறிவியல் பரப்புரையாலரும் ஆவார். இவர் அண்மைப் பால்வெளிகளைக் கண்டுபிடிக்கும் செய்முறைக் கருவிகளை வடிவமைக்கிறார். ஐவர் மெக்டொனால்டு வான்காணக ஆபி-எபர்லி தொலைநோக்கிக்கும் வைரசு (VIRUS) எனும் கருப்பு ஆற்றல் ஆய்வுத் திட்டத்துக்கும் கருவி அறிவியலாளராகப் பணிபுரிகிறார்.
இளமையும் கல்வியும்
[தொகு]தட்டில் கலிபோர்னியாவில் உள்ள சாந்தா குரூசில் பிறந்து வளர்ந்தார்.[1] இவர் சாந்தா குரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் 2001 இல் இளவல் பட்டம் பெற்றார்.[2] பட்டம் பெற்றதும் ஆடு விழ்சன் நிறுவனத்தில் ஆராய்ச்சி அறிவியலாளராகச் சேர்ந்தார். இவர் முதல் திரையச்சிட்ட பலபடிம ஒளியுமிழ் இருமுனைய உருவாக்க்க் குழுவில் இருந்துள்ளார்.[3] ஐவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதுவர் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் டேவிட் சிமினோவிச்சுடன் இணைந்து பயர்பால் (FIREBall) எனப்பட்ட மங்கலான பால்வெளியிடை ஊடகச் செம்பெயர்ச்சி உமிழ்வு ஊதற்கலத்தில் பணிபுரிந்தார்.[4][5][6] பயர்பால் என்பது ஊதற்கல தொலைநோக்கி ஆகும். இது புற ஊதா- கட்புல கதிர்நிரலியுடன் இணைந்த தொலைநோக்கியாகும்.[7]
ஆராய்ச்சியும் வாழ்க்கைப்பணியும்
[தொகு]இவர் ஆபி-எபெர்லி தொலைநோக்கியின் வைரசு காணி உருவாக்கத்துக்குத் தலைமையேற்று வழிநடத்தினார்.[8][9] இவர் 2016 இல் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார்.[10] இவர் இப்போது அப்பாச்சி பாயின்ட் வான்காண்க கதிர்நிரலியல் திட்டத்துக்குத் தலைமையேற்று வழிநடத்துகிறார்.[10]
இவர் வானியலில் 365 நாள் எனும் இணைய ஒலிபரப்பு நிகழ்ச்சியில் தோன்றியுள்ளார்.[2] இவர் அமெரிக்க வானியல் கழகப் பணிபட்டறைகளுக்குப் பங்களிப்புகள் செய்துள்ளார். மிகவும் பன்முகமானதும் அனைத்தும் உள்ளடக்கியதுமான சூழலைக் கட்டியமைக்கும் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க ஒத்துழைப்பு நல்கிவருகிறார்.[11][12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "instrumentation | astrotweeps". astrotweeps.wordpress.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-02.
- ↑ 2.0 2.1 "Sarah Tuttle". 365 Days of Astronomy (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-07-03. பார்க்கப்பட்ட நாள் 2018-07-02.
- ↑ Screen printable electroluminescent polymer ink, issue-date: 2002-12-20, பார்க்கப்பட்ட நாள் 2018-07-02
- ↑ "Sarah Tuttle". user.astro.columbia.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-02.
- ↑ "July 27th: Astronomical Ballooning – Or, What Goes Up Must Come Down" (in en-US). 365 Days of Astronomy. 2009-07-27. https://cosmoquest.org/x/365daysofastronomy/2009/07/27/july-27th-astronomical-ballooning-or-what-goes-up-must-come-down/.
- ↑ Milliard, Bruno; Martin, D. Christopher; Schiminovich, David; Evrard, Jean; Matuszewski, Matt; Rahman, Shahinur; Tuttle, Sarah; McLean, Ryan et al. (2010-07-16). "FIREBALL: the Faint Intergalactic medium Redshifted Emission Balloon: overview and first science flight results" (in en). Space Telescopes and Instrumentation 2010: Ultraviolet to Gamma Ray. Space Telescopes and Instrumentation 2010: Ultraviolet to Gamma Ray (SPIE) 7732: 773205. doi:10.1117/12.857850. https://utexas.influuent.utsystem.edu/en/publications/fireball-the-faint-intergalactic-medium-redshifted-emission-ballo. பார்த்த நாள்: 2018-09-18.
- ↑ Tuttle, Sarah E.; Schiminovich, David; Milliard, Bruno; Grange, Robert; Martin, D. Christopher; Rahman, Shahinur; Deharveng, Jean-Michel; McLean, Ryan et al. (2008-07-12). "The FIREBall fiber-fed UV spectrograph" (in en). Ground-based and Airborne Instrumentation for Astronomy II. Ground-based and Airborne Instrumentation for Astronomy II (SPIE) 7014: 70141T. doi:10.1117/12.789836. Bibcode: 2008SPIE.7014E..1TT.
- ↑ "NSF Award Search: Award#1532169 - MRI: Development of VIRUS2 - A Scalable Integral Field Spectrograph for McDonald Observatory". www.nsf.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-07-02.
- ↑ "Columbia University Department of Astronomy". www.astro.columbia.edu. Archived from the original on 2018-06-20. பார்க்கப்பட்ட நாள் 2018-07-02.
- ↑ 10.0 10.1 "Faculty Spotlight: Sarah Tuttle – Department of Astronomy". depts.washington.edu (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-02.
- ↑ Brinkworth, Carolyn; Skaer, Allison Byrd; Prescod-Weinstein, Chanda; Teske, Johanna; Tuttle, Sarah (2016-10-05). "Building an Inclusive AAS - The Critical Role of Diversity and Inclusion Training for AAS Council and Astronomy Leadership". arXiv:1610.02916 [astro-ph.IM].
- ↑ "We Are The Scientists Against A Fascist Government – The Establishment". The Establishment. 2017-02-02 இம் மூலத்தில் இருந்து 2018-05-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180504143345/https://theestablishment.co/we-are-the-scientists-against-a-fascist-government-d44043da274e.