சாம்சர் சிங் மனாசு
சாம்சர் சிங் மனாசு Shamsher Singh Manhas | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 11 பிப்ரவரி 2015 – 10 பிப்ரவரி 2021 | |
தொகுதி | சம்மு காசுமீர் மாநிலங்களை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சம்மு |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
தொழில் | நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை |
சாம்சர் சிங் மனாசு (Shamsheer Singh Manhas) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சம்மு நகரத்தில் 1960 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சம்மு & காசுமீர் அரசியலில் பாரதிய சனதா கட்சி உறுப்பினராகச் செயல்பட்டார். இயனக் சிங்கின் மகனாக அறியப்படும் இவர் ஒரு விவசாயியாகவும் சமூக சேவையாளராகவும் அறியப்படுகிறார். சம்மு மற்றும் காசுமீர் ஒன்றியப் பிரதேசத்தில் வலதுசாரி அரசியல் சித்தாந்தத்தின் புத்துணர்ச்சியாளராகவும் கருதப்படுகிறார். நீண்ட காலமாக இராசுட்ரிய சுயம்சேவாக் சங்கத்தின் தீவிர பிரச்சாரகராக இருந்து வருகிறார், பிராந்தியத்தில் ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதியாக அறியப்படும் இவர் ஒரு விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.
சாம்சர் சிங் மனாசு சம்மு காசுமீர் அரசியலில் நன்கு அறியப்பட்ட ஆளுமையாக பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[1][2] 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாரதிய சனதா கட்சி உறுப்பினராக சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] சாம்சர் சிங் மனாசு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியன்று ஓய்வு பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shamsher Singh Manhas". National Portal Of India. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
- ↑ "Shamsher_Singh_Manhas". Facebook.com. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
- ↑ "PDP leader Shamsheer_Singh_Manhas wins seat in J&K Rajya Sabha election". NewsWala.com இம் மூலத்தில் இருந்து 2 February 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160202171753/http://www.newswala.com/India-National-News/BJP-leader-Shamsher-Singh-Manhas-wins-a-Rajya-Sabha-seat-in-JK-134082.html. பார்த்த நாள்: 10 October 2015.