சாமந்தமலை
சாமந்தமலை | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
சாமந்தமலை (Samanthamalai) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது கிருஷ்ணகிரியிலிருந்து, பெங்களுரு செல்லும் வழியில் 8 கி.மீ தொலைவிலும், வேப்பனப்பள்ளியில் இருந்து 13 கி.மீ தொலைவலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 268 கி.மீ. தொலைவிலும் உள்ளது. [1]
மக்கள் தொகை
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சாமந்தமலை மக்கள்தொகை சுமார் 3,000 ஆகும். இதில் ஆண்கள் 49% பெண்கள் 51%. ஆவர் இங்கு வாழும் மக்கள் பெரும்பன்மையோனோர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். கிருத்துவ மதத்தை சார்ந்த சிறுபான்மையினரும் வசிக்கின்றனர். இங்கு பரவலாக பேசப்படும் மொழிகள் தமிழ், கன்னடம், தெலுங்கு போன்றவை ஆகும்.
போக்குவரத்து
[தொகு]சாமந்தமலை கிராமம் தேசிய நெடுஞ்சாலை எண் 7 க்கு மிக அருகில் உள்ளது. பேருந்து எண் : 55, 11A, 11B, 13B ,13 போன்றவற்றில் செல்லலாம். தானி வசதியும் உளளது.
இடங்கள்
[தொகு]சாமந்தமலை பஞ்சாயத்தில் முக்கியமாக உள்ள கிராமங்கள்:
- குட்டூர்
- சின்ன குட்டூர்
- ஒன்டியூர்
- பெத்தம்பள்ளி
- பச்சிகானப்பள்ளி
- பண்டபள்ளி
பள்ளிகள்
[தொகு]- அரசு ஆரம்ப பள்ளி, சாமந்தமலை
- அரசு ஆரம்ப பள்ளி, குந்தாரப்பள்ளி
- அரசு உயர் நிலைப் பள்ளி, குந்தாரப்பள்ளி
- ஸ்ரீ சத்ய சாய் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி , குந்தாரப்பள்ளி
- ஸ்ரீ சரஸ்வதி வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குந்தாரப்பள்ளி
குறிப்புகள்
[தொகு]- ↑ "Samanthamalai". http://www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2017.
{{cite web}}
: External link in
(help)|publisher=