சாந்தி (யானை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தி
ஏப்பிரல் 2007இல் சான்ந்தி
இனம்இலங்கை யானை
பால்பெண் யானை
பிறப்பு1975
இலங்கை
இறப்புஜூன் 26, 2020 (வயது 45)
சிமித்சோனிய தேசிய விலங்குக்காட்சிச் சாலை
அறியப்படுவதற்கான
 காரணம்
அதிகம் ஆராயப்பட்ட ஆசிய யானை, ஜிம்மி கார்ட்டருக்கு இலங்கை அரசால் பரிசாக வழங்கப்பட்டது.

சாந்தி (Shanthi) (1975 - ஜூன் 26, 2020) என்பது 1976ஆம் ஆண்டு இலங்கை அரசால் அமெரிக்காவிற்கு பரிசாக வழங்கப்பட்ட இலங்கை யானையாகும். இதுவரை அதிகம் ஆய்வு செய்யப்பட்ட ஆசிய யானையாக இது கருதப்படுகிறது.[1]

ஆரம்ப ஆண்டுகள்[தொகு]

1975 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த இந்த ஆசிய யானை 1976 வரை பின்னவல யானைகள் காப்பகத்தில் வாழ்ந்தது.[2]

அமெரிக்காவிற்கு பரிசு[தொகு]

1976 இல், சாந்தி இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டது. அனாதை கன்றுக்குட்டியான இது இலங்கையின் முதலாவது சனாதிபதி வில்லியம் கோப்பல்லாவ என்பவரால் அமெரிக்காவிற்கு பரிசாக வழங்கப்பட்டது. ஏப்ரல் 2, 1977 இல் வாசிங்டன், டி. சி.யிலுள்ள தேசிய விலங்குக்காட்சிசாலையில் நடந்த விழாவில், இலங்கைத் தூதரக அதிகாரியின் மகள் புனிதா குணரத்னவினால், சனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் மகள் ஆமி கார்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.[3]

சாந்தி, குமாரி என்ற பெண்யானைக்கு 1993 இல் பிறந்தது. குமாரி 1995 இல் குருதிகசிவு நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது. குமாரி ஓக்லஹோமா நகர விலங்கியல் பூங்காவில் வசிக்கும் கந்துலா என்ற ஆண் யானையை 2001 இல் பெற்றெடுத்தது.[4]

இறப்பு[தொகு]

சாந்தி, தனது 45 வது ஆண்டு நிறைவை எட்டியபோது, பல தசாப்தங்களாக அதிகரித்து வந்த முதுமை மூட்டழற்சி நோயினால் பலவீனமானது. பின்னர் ஜூன் 26, 2020 அன்று வாசிங்டன், டி. சி.யிலுள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் கருணைக்கொலை செய்யப்பட்டது.[3][2][1]

இதனையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Magazine, Smithsonian; Sexton, Courtney. "National Zoo Mourns Beloved Member of Its Herd". Smithsonian Magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-20.
  2. 2.0 2.1 "Female Asian Elephant Dies at Smithsonian's National Zoo". Smithsonian's National Zoo (in ஆங்கிலம்). 2020-06-27. பார்க்கப்பட்ட நாள் 2023-10-20.
  3. 3.0 3.1 "Shanthi, world's most studied elephant, dies at Washington's National Zoo". Mongabay Environmental News (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-07-09. பார்க்கப்பட்ட நாள் 2023-10-20.
  4. . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_(யானை)&oldid=3955932" இலிருந்து மீள்விக்கப்பட்டது