சாந்தலிங்க சுவாமிகள்
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் என்பவர் தமிழ்நாட்டில் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் தலைசிறந்து விளங்கிய ஆன்ம அருளாளர். தொண்டை நாட்டில் அவதரித்த இவர், காஞ்சிவாய் பேரூரில் திருமடம் அமைத்து வீீீரசைவ நெறியை மேற்கொண்டொழுகியவர்.
இவர் திருக்கயிலாய பரம்பரை, திருவாவடுதுறை ஆதீனத்தவரான துறையூர் சிவப்பிரகாச தேசிகரிடம் உபதேசம் பெற்றவர். இதனை,
'செப்பிரும் கைலைக் குருமுறை மையிற்றன்
சிரமிசைச் சரணம்வைத் துளவோர்'
என்ற வைராக்கிய தீீப அடிகளால் அறியலாம்.
மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகளின் திருவருட் குறிப்பின்படி கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாசரின் தங்கை ஞானாம்பிகையை சாந்தலிங்கர் மணம் முடித்து கொண்டார்.
கன்னட அரசரும் விருத்தாச்சலத்தில் (திருமுதுகுன்றம்) திருமடம் நிறுவிய அருளாளருமான குமாரதேவர் மற்றும் சாந்தலிங்கர் அருள் நூல்களுக்கு உரை எழுதியவரான திருப்போரூர் முருகன் சந்நதிவாழ் சிதம்பர சுவாமிகள் ஆகிய இருவரும் சீடர்களாவர்.
சாந்தலிங்கர் இயற்றிய கொலை மறுத்தல், வைராக்ய சதகம், வைராக்ய தீபம், அவிரோத உந்தியார் போன்ற நூல்கள் முறையே சீீீீவகாருண்யம், ஈசுவர பக்தி, பாச வைராக்கியம், பிரம்ம ஞானத்தை உணர்த்துவன.
இவர் சமாதியான மாசிமகத் திருநாள் ஆனது பேரூராதீனம் சார்பாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கருவி நூல்
[தொகு]உரையாசிரியர்கள் - மு.வை.அரவிந்தன்