சாநிக்ரோ 28
Appearance
சாநிக்ரோ 28 (Sanicro 28) [1][2] என்பது இரும்பின் கலப்புலோகம் ஆகும். சாநிக்ரோ 28 என்ற வணிகப்பெயர் கொண்ட இக்கலப்புலோகம் கலப்புலோகம் 28 [3] என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இரும்புடன் நிக்கலும், குரோமியமும் சேர்க்கப்பட்டு இந்த உலோகக் கலவை தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் இது துருப்பிடிப்பதனால் ஏற்படும் அரிப்பைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். குறிப்பாக கந்தக அமிலம் மற்றும் [[பாசுபாரிக் அமிலம்[[ ஆகியவற்றை சாநிக்ரோ 28 எதிர்க்கிறது. குறிப்பாக இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் போக்குவரத்து, அணு எரிபொருள் போக்குவரத்து, அமில உற்பத்தி மற்றும் போக்குவரத்து சேவைகள் போன்றவற்றில் பொதுவாக இக்கலப்புலோகம் பயன்படுத்தப்படுகிறது. இயைபு
எடை% | Ni | Fe | Cr | Mo | Cu | C | Mn | S | Si |
கலப்புலோகம் 28 | 30-32 | 21-22 | 26-28 | 3-4 | 0.6-1.4 | 0.02 | 2 | 0.03 | 0.70 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sanicro 28 high-alloy austenitic stainless steel — Sandvik Materials Technology". www.smt.sandvik.com. Retrieved 2015-06-03.
- ↑ "Sanicro 28 — Sandvik Materials Technology". www.smt.sandvik.com. Retrieved 2015-06-03.
- ↑ "Alloy 28 (UNS N08028 / 1.4563) - Aircraft Materials". www.aircraftmaterials.com. Retrieved 2015-06-03.