சாத்தியக்கூறுகளின் அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது | சூன் 6, 2022 |
---|---|
அமைவிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூற்று | 13°02′48″N 80°16′48″W / 13.0467°N 80.2799°W |
வகை | சமூக அருங்காட்சியகம் |
வலைத்தளம் | tnmop |
சாத்தியக்கூறுகளின் அருங்காட்சியகம் என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் ஆகும். இது தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு உதவக்கூடிய சாதனங்கள், உதவி தொழில்நுட்பங்கள் மற்றும் அணுகக்கூடிய வீட்டு மாதிரி ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகிறது.[1][2] இந்த அருங்காட்சியகம் மாற்றுத்திறனாளிகளின் சமூகத்திற்கு அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களின் கண்டுபிடிப்பாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.
அமைவிடம்
[தொகு]சென்னை மாநகர் கடற்கரைச் சாலையான காமராசர் சாலையில் அமைந்துள்ளது. 2022ஆம் ஆண்டு சூன் மாதம் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில், அருங்காட்சியகம் 400 பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. இதன் பார்வையாளர்களில் சிறப்புக் கல்வியாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள், அவர்களது குடும்பத்தினர் எனப் பலரும் வருகை தந்துள்ளனர்.
சிறப்பு வசதிகள்
[தொகு]அருங்காட்சியக நுழைவாயிலுக்கு அருகில் ஒரு தொட்டுணரக்கூடிய வரைபடம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் பயன்படுத்த முக்கிய அடையாளங்கள் மற்றும் உட்புற வழிசெலுத்தல் குறித்த செயலி ஒன்றும் உள்ளது. அருங்காட்சியகத்தில் திறன்பேசிகள் உள்ளன. பார்வையாளர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது திறன்பேசி செயலியினைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். காட்சிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கியூ. ஆர். குறி உள்ளது. பார்வையாளர்கள் உரை, படம், ஒலி விளக்கம் மற்றும் சைகை மொழி வரையிலான பல்வேறு அணுகக்கூடிய விவரங்களை வருடி அணுகலாம்.
அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று, அணுகக்கூடிய மாதிரி வீடு ஆகும். இதில் வரவேற்பு அறை, சமையலறை, குளியலறை மற்றும் படுக்கையறை உலகளாவிய வடிவமைப்பு கூறுகள், உதவி சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைக் காட்சிப்படுத்துகிறது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Museum of Possibilities in Chennai shows way for disabled". Retrieved 2022-11-26.
- ↑ "Chennai's Museum of Possibilities - Ensuring BLISSful life for persons with disabilities". https://www.thehindu.com/news/national/tamil-nadu/chennais-museum-of-possibilities-ensuring-blissful-life-for-persons-with-disabilities/article65692683.ece.
- ↑ https://www-thehindu-com.translate.goog/news/national/tamil-nadu/chennais-museum-of-possibilities-ensuring-blissful-life-for-persons-with-disabilities/article65692683.ece?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc
- ↑ https://urbandesigncollective-org.translate.goog/projects-initiatives/urban-mapping-and-research/museum-of-possibilities/?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc