சாங்கோயிட்டு
சாங்கோயிட்டு Changoite | |
---|---|
![]() அறுகோண நிறமற்ற கராகோலைட்டுடன் தொடர்புடைய சாங்கோயிட்டு கனிமத்தின் மஞ்சள் நிறப் படிகங்கள். | |
பொதுவானாவை | |
வகை | சல்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Na2Zn(SO4)2·4H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது |
படிக இயல்பு | வடிவமற்ற படிகங்கள் |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு |
மோவின் அளவுகோல் வலிமை | 2-3 |
மிளிர்வு | பளபளக்கும் |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 2.50 (அளவிடப்பட்டது) |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα=1.51, nβ=1.51, nγ=1.52 (தோராயம்) |
2V கோணம் | 83° (கணக்கிடப்பட்டது) |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
சாங்கோயிட்டு (Changoite) என்பது Na2Zn(SO4)2·4H2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும்.[4][2] இது ஓர் அரிய துத்தநாக சல்பேட்டு கனிமமாகும். சாகோயிட்டு கனிமம் சிலி நாட்டின் அண்டோஃபாகசுட்டாவில் உள்ள சியரா கோர்டாவுக்கு அருகிலுள்ள சான்பிரான்சிசுகோ சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[3] சாங்கோயிட்டு கனிமமானது புளோடைட்டு கனிமத்தின் துத்தநாக ஒப்புமையாகும். புளோடைட்டு குழுவின் மற்ற பிரதிநிதிகளான கோபால்டோபுளோடைட்டு, மாங்கனோபுளோடைட்டு மற்றும் நிக்கல்புளோடைட்டு ஆகியவற்றின் துத்தநாக-ஒப்புமையாகவும் சாங்கோயிட்டு கருதப்படுகிறது.[4] வேதியியலின் அடிப்படையில் சாங்கோயிட்டு கனிமம் கிட்டத்தட்ட கோர்டைட்டைப் போலவே உள்ளது.[5] கனிமத்திற்கான சாங்கோயிட்டு என்ற பெயர் சிலியின் ஆரம்பகால குடிமக்களான சாங்கோசு என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது.[6]
சாங்கோயிட்டு கனிமத்தில் மக்னீசியம் மற்றும் கால்சியத்தின் தடயங்கள் மிகக் குறைவாகும்.[3]
சாங்கோயிட்டு கனிமத்துடன் இணைந்து இயிப்சம், துத்தநாகம் கொண்டுள்ள பராடகாமைட்டு தேனார்டைட்டு ஆகிய கனிமங்கள் இணைந்து காணப்படுகின்றன.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சாங்கோயிட்டு கனிமத்தை Cgo[7] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mineralienatlas
- ↑ 2.0 2.1 Schlüter, J., Klaska, K.-H., and Gebhard, G., 1999. Changoite, Na2Zn(SO4)2·4H2O, the zinc analogue of blödite, a new mineral from Sierra Gorda, Antofagasta, Chile. Neues Jahrbuch für Mineralogie - Monatshefte 3(3), 97-103.
- ↑ 3.0 3.1 3.2 "Chagoite- Handbook of Mineralogy" (PDF). Handbookofmineralogy.org. Retrieved 2016-03-11.
- ↑ 4.0 4.1 4.2 "Changoite: Changoite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-11.
- ↑ "Gordaite: Gordaite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-11.
- ↑ "Gordaite: Gordaite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-11.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.