சாக்லேட் (தொலைக்காட்சித் தொடர்)
சாக்லேட் | |
---|---|
வகை | காதல் சமையல் |
எழுத்து | எஸ்.மரத்து சங்கர் |
இயக்கம் | சுரேஸ் கிருஷ்ணா (1-32) அழகர் (33-70) அன்ஷர் கான் (71-84) |
படைப்பு இயக்குனர் | வி.சந்திரசேகர் கே.ராமகிருஷ்ணன் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 84 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | வைதேகி ராமமூர்த்தி |
ஒளிப்பதிவு | |
தொகுப்பு | கே.லட்சுமிகாந்த் வசிகரன் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 16 திசம்பர் 2019 ஒளிபரப்பில் | –
Chronology | |
முன்னர் | கல்யாணப்பரிசு 2 |
தொடர்புடைய தொடர்கள் | சாக்லேட் (மலையாளம்) |
சாக்லேட் என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 16, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பான சமையல் மற்றும் காதல் காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் இதே பெயரில் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மலையாள மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.[1]
இந்த தொடரில் கதாநாயகனாக நந்தினி தொடர் புகழ் ராகுல் ரவி என்பவர் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்திலும் இவருக்கு ஜோடியாக இனியா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை ஷாமிலி நடித்துள்ளார்கள். இந்த தொடர் கொரோனாவைரசு காரணத்தால் 31 மார்ச்சு 2020 முதல் 84 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டது.
கதை சுருக்கம்
[தொகு]இந்த தொடரின் கதை இனிப்பு தொழிலை தனது உயிராகவும் விருப்பத்துடனும் செய்யும் மான்நிற கதாநாயகி. இன்னொரு பக்கம் தொழிலை தொழிலாக மட்டும் பார்க்கும் கதாநாயகனும் ஒன்றாக வேலை செய்தால் என்னவாகும் என்பதுதான் கதை.
நடிகர்கள்
[தொகு]முதன்மை கதாபாத்திரம்
[தொகு]- ராகுல் ரவி - விக்ரம்
- ஷாமிலி - இனியா விக்ரம்
- வந்தனா பிருந்தா - பல்லவி
இனியா குடும்பத்தினர்
[தொகு]- சதீஷ் - வாசுதேவன்
- காயத்ரி பிரியா - சிவகாமி வாசுதேவன்
- ரித்திகா - அமிர்தா
விக்ரம் குடும்பத்தினர்
[தொகு]- அபிஷேக் சங்கர் - சஞ்சய் குமார்
- மாமிலா ஷைலஜா பிரியா - ரேணுகா சஞ்சய் குமார்
- அக்ஷிதா அசோக் - வைஷாலி
- ரவிக்குமார் - நாராயணன்
- ஸ்வப்னா - ரம்யா ரமேஷ்
- மோசஸ் - ரமேஷ்
- விக்னேஷ் ரெட்டி - ராகுல்
நடிகர்களின் தேர்வு
[தொகு]இது ஒரு மறு தயாரிப்பு தொடர் ஆகும் இந்த தொடரில் ராகுல் ரவி என்பவர் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் ராகுல் ரவி நடித்துள்ளார். இது இவரின் இரண்டாவது தமிழ் தொடர் ஆகும். இதற்க்கு முதல் நந்தினி என்ற வெற்றி தொடரில் கதாநாயகனான நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மலையாள பதிப்பிலும் இதே கதாபாத்திரத்தில் நடித்தார்,[2] அந்த தொடரிலிருந்து விலகி தமிழ் தொடரில் நடிக்கின்றார். இதனால் மலையாளிகள் மத்தியில் இவருக்கு சில எதிர்ப்புகள் வலைத்தளங்களில் உருவானது.
இனியா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை ஷாமிலி நடித்துள்ளார். இவர் இதற்க்கு முன் கன்னட தொடர்களில் நடித்துள்ளார். இவரின் தாய் காதாபாத்திரத்தில் காயத்ரி பிரியா நடிக்கின்றார். மலையாளப்ப பதிப்பிலும் இவரே தாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தந்தை கதாபாத்திரத்தில் சதிஷ் நடித்துள்ளார் இவர் ஆனந்தம், அத்திப்பூக்கள் போன்ற பல தமிழ் தொடர்களில் நடித்துள்ளார்கள்.
மதிப்பீடுகள்
[தொகு]கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2019 | 3.9% | 4.5% |
2020 | 4.0% | 4.6% |
சர்வதேச ஒளிபரப்பு
[தொகு]- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் விஷன் டைம் என்ற யூடியூப் அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ் என்ற இணைய மூலமாகவும் எப்பொழுது பார்க்கமுடியும்.
- இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சி சேவையான சக்தி தொலைக்காட்சியில் சிங்களம் உபதலைப்புடன் ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தினம் தினம் இனிக்குமா இந்த சாக்லேட்?". tamil.oneindia.com.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Rahul Ravi to play Vikram on Chocolate". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் May 20, 2019.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி பிற்பகல் 3 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | சாக்லேட் (16 டிசம்பர் 2019 - 31 மார்ச்சு 2020) |
அடுத்த நிகழ்ச்சி |
கல்யாணப்பரிசு 2 (16 மார்ச்சு 2019 - 14 டிசம்பர் 2019) |
- |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 10 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | சாக்லேட் | அடுத்த நிகழ்ச்சி |
நாகமோகினி |
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழ் சமையல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- மலையாளதில் இருந்து மறு-ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள்
- தொலைக்காட்சியில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம்