உள்ளடக்கத்துக்குச் செல்

சலோனி சோப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலோனி சோப்ரா
பிறப்புசலோனி சோப்ரா
3 ஆகத்து 1991 (1991-08-03) (அகவை 33)
மும்பை, இந்தியா
தேசியம்ஆத்திரேலியர்
மற்ற பெயர்கள்டினா[1]
பணிநடிகை, வடிவழகி, எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2013-தற்போதுவரை

சலோனி சோப்ரா (Saloni Chopra) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓர் ஆஸ்திரேலிய நடிகை, வடிவழகி மற்றும் எழுத்தாளர் ஆவார், இவர் இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றுகிறார். இவரது புத்தகம் ரெசுக்கியூடு பை எ ஃபெமினிஸ்டு:அன் இந்தியன் ஃபைரி டேல் ஆஃப் ஈக்குவாலிட்டி அண்ட் அதர் மித் டிசம்பர் 2020 இல் வெளியிடப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், சஜித் கான் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிறகு இவர் மி டூ இயக்கத்தில் (இந்தியா) சேர்ந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இந்தியா,மும்பை மகாராட்டிராவில் சோப்ரா பிறந்தார்.[2] குழந்தை பருவத்தில், பிரேம் கிரந்த் படத்தில் இவர் நடித்தார்.[1] இவர் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் இவரது தாய்வழி தாத்தா பாட்டிகளால் வளர்க்கப்பட்டார் [2][3] மற்றும் 18 வயதில் இந்தியா திரும்பினார்.[3] இவரது தாயார் வடிவமைப்பாளராக இருந்தார், மேலும் சோப்ரா திரைப்படத் தொகுப்புகளில் இவருக்கு உதவினார்.[3] தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்தார்.[2][4]

தொழில்

[தொகு]

கிரிஷ் 3 மற்றும் கிக் (2014 திரைப்படம்) ஆகியவற்றுக்கு சோப்ரா உதவி இயக்குனராக இருந்தார்.[2] இவர் ரன்தீப் ஹூடாவின் ஒப்பனையாளராகவும் பணியாற்றியுள்ளார். தனது நடிப்பு வாழ்க்கையை 2013 ஆம் ஆண்டில் வெளியான மாயா மூலம் தொடர்ந்தார். இது கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டது.[2] 2016 ஆம் ஆண்டு எம்டிவி கேர்ள்ஸ் ஆன் டாப் நிகழ்ச்சியில் இஷா ஜெய்சிங்காக அறிமுகமானார்.[2][5] மென்ஸ்எக்ஸ்பியின் கூற்றுப்படி, " 2016 ஆம் ஆண்டில் எம்டிவி நிகழ்ச்சியான கேர்ள்ஸ் ஆன் டாப்பில் இவர் திரும்பியது, இவருக்கு இளம் பெண்களின் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது" எனக் கூறப்பட்டது.[3]

2016 ஆம் ஆண்டில், இவரது புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகளின் ஐந்து பகுதி தொடர்கள் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு "தைரியமான ஒளிப்ப்டநிகழ்வு" மற்றும் "சமூகத்தில் பழமைவாத கருத்துக்களை உடைத்து பெண்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் முயற்சி" என்று விவரித்ததை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டார்,[6] [7] 2018 ஆம் ஆண்டில், இந்தியா டுடே உருவாக்கிய கூடுதல் புகைப்படங்களை இவர் வெளியிட்டார், ஏனெனில் சோப்ரா "பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் குறைபாடுகளை யாரும் கொண்டாட விரும்பவில்லை." என்று குறிப்பிட்டார்[8]

இவர் 2018 பாலிவுட் திரைப்படமான ரேஸ் 3 [9] மற்றும் 2018 தொலைக்காட்சித் தொடரான ஸ்க்ரூவ் அப் ஆகியவற்றில் தோன்றினார்.[10] வாக்கிங் வித் மேகி என்ற வலைத் தொடரிலும் நடித்தார்.[2] வடிவழகியாக, இவர் நவம்பர் 2018 மென் எக்சுபி பத்திரிகை அட்டையில், மி டூ: சோனா மகபத்ரா , குப்ரா சயீத் அண்ட் சலோனி சோப்ரா என்ற தலைப்பில் இடம்பெற்றார்.[3][11]

டிசம்பர் 2020 இல், ரெசுக்கியூடு பை எ ஃபெமினிஸ்டு:அன் இந்தியன் ஃபைரி டேல் ஆஃப் ஈக்குவாலிட்டி அண்ட் அதர் மித் எனும் தனது புத்தகத்தை இவர் வெளியிட்டார், பாலின சமத்துவம், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளின் தொகுப்புகளும்,[12][13] அத்துடன் இவளுடைய அனுபவங்களைப் பற்றிய கதைகளும் இதில் இடம் பெற்று இருந்தது.[14]

மிடூ செயற்பாடு

[தொகு]

2018 ஆம் ஆண்டில், சஜித் கான் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிறகு இவர் மி டூ இயக்கத்தில் (இந்தியா) சேர்ந்தார்.

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Madhuri Dixit’s young co-star in Prem Granth is Saloni Chopra of MTV Girls On Top. See her pics". Hindustan Times. May 26, 2021. https://www.hindustantimes.com/entertainment/bollywood/madhuri-dixit-s-little-co-star-in-prem-granth-saloni-chopra-looks-like-this-now-101622022255715.html. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Kapoor, Aekta (May 2, 2018). "Saloni Chopra on Social-Media Activism and the Body as a Feminist Statement". eShe. https://eshe.in/2018/05/02/saloni-chopra-cover-story/. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "#MeToo And The Sum Of Its Parts". MENSXP. November 18, 2018. https://www.mensxp.com/digital-cover/me-too-cover.html. 
  4. Srivastava, Namrata (December 6, 2016). "Saloni Chopra: Breaking the mould". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/entertainment/television/061216/saloni-chopra-breaking-the-mould.html. 
  5. Suthar, Manisha (3 March 2018). "Saloni, Ayesha, Barkha nostalgic about their journey on MTV Girls On Top". Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Saloni-Ayesha-Barkha-nostalgic-about-their-journey-on-MTV-Girls-On-Top/articleshow/54672103.cms. 
  6. Shekhar, Mimansa (August 24, 2016). "Saloni Chopra makes a strong point about rape, sexuality and slut shaming with a bold photoshoot, see pics". The Indian Express. https://indianexpress.com/article/entertainment/television/saloni-chopra-makes-a-strong-point-about-rape-sexuality-and-slut-shaming-with-a-bold-photoshoot-see-pics-2994329/. 
  7. Das, Ria (December 7, 2016). "Check Out Saloni Chopra's Photo Series On Rape, Slut Shaming". SheThePeople.TV. https://www.shethepeople.tv/news/check-out-saloni-chopras-photo-series-on-rape-slut-shaming/. 
  8. Web Desk (September 8, 2018). "TV actress Saloni Chopra posts a topless picture; asks women to celebrate their flaws". India Today. https://www.indiatoday.in/television/what-s-hot/story/tv-actress-saloni-chopra-posts-a-topless-picture-asks-women-to-celebrate-their-flaws-1335245-2018-09-08. 
  9. Webdesk, DNA (13 Jan 2018). "This 'Race 3' actress was one of the background dancers of 'Race' 10 years ago". Daily News and Analysis. https://www.dnaindia.com/bollywood/report-this-race-3-actress-was-one-of-the-background-dancers-of-race-10-years-ago-2624913. 
  10. Suthar, Manisha (3 March 2018). " Varun Jain, Saloni Chopra and Shishir Sharma in an upcoming web-series 'Screwed Up'". https://www.iwmbuzz.com/digital/news-digital/varun-jain-saloni-chopra-shishir-sharma-upcoming-web-series-screwed/2018/03/03. 
  11. Dabas, Rhea (November 13, 2018). "MeToo: Sona Mohapatra, Kubbra Sait & Saloni Chopra". MensXP. https://www.mensxp.com/special-features/features/48306-metoo-sona-mohapatra-kubbra-sait-saloni-chopra.html. 
  12. Jerath, Manasvi (March 20, 2021). "'We need to stop glorifying sacrifices of womxn': Actor-Author Saloni Chopra". Moneycontrol. https://www.moneycontrol.com/news/trends/features/we-need-to-stop-glorifying-sacrifices-of-womxn-actor-author-saloni-chopra-6662011.html. 
  13. Gupta, Rudrani (February 19, 2021). "Rescued By A Feminist: Saloni Chopra’s Book Is A Guide To Build A Feminist Generation". SheThePeople.TV. https://www.shethepeople.tv/top-stories/inspiration/rescued-by-a-feminist-saloni-chopras-book/. 
  14. Kuenzang, Karishma (December 7, 2020). "Social Media Star of the Week: Saloni Chopra". Hindustan Times. https://www.hindustantimes.com/brunch/social-media-star-of-the-week-saloni-chopra/story-6RNarfG4Xh9tNPptUYVAAM.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலோனி_சோப்ரா&oldid=3996659" இலிருந்து மீள்விக்கப்பட்டது