சர்பகந்தி
சர்பகந்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Gentianales
|
குடும்பம்: | Apocynaceae
|
பேரினம்: | Rauvolfia
|
இனம்: | R. serpentina
|
இருசொற் பெயரீடு | |
Rauvolfia serpentina (L) Benth. ex Kurz[1] | |
வேறு பெயர்கள் [2] | |
|
சர்பகந்தா (rauvolfia serpentina; பாம்புக்களா / பாம்பு கலா, சிவன் அமல் பொடி) எனப்படும் மூலிகைச் செடி தென்கிழக்கு ஆசியாவினைச் சார்ந்ததாகும். இத்தாவரம் கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் உயர் ரத்த அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை குணப்படுத்த பயன்பட்டதாக தெரிகிறது. சுமார் 400 ஆண்டுகளாக இதன் வேரை மூலிகையாகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆயுர்வேத நூலான சரஹ சம்ஹிதாவில் இதனைப்பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
ஐரோப்பாவில் இதனுடைய பயன் 1785 ஆம் ஆண்டில்தான் தெரிய வந்தது. சர்பகந்தியின் திறன் 1946-ம் ஆண்டிற்குப் பின்னரே நவீன மருத்துவத்தில் பரவ ஆரம்பித்தது. இதன் பிறப்பிடம் துணை ஆசியாக் கண்டம் பின் இந்தியா, அந்தமான், தென்கிழக்கு ஆசியா, வங்காளதேசம், பர்மா, இந்தோனேசியா, மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பரவி வளர்க்கப்பட்டது. இந்தியாவில் பஞ்சாப், சிக்கிம், பூடான், அசாம் மற்றும் தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அதிகம் வளர்கிறது.[3][4]
சர்ப்பகந்தி வறட்சியைத் தாங்கி வளரும். அதிக குளிரும், அதிக மழையும் இத்தாவரத்திற்கு ஆகாது. இதன் ஆணிவேர் ஆழமாக நேராகச் செல்லும், சல்லிவேர்கள் கிளையாகப்பிரியும். பதினெட்டு மாதங்கள் வளர்ந்த செடிகளின் வேர் மருத்துவப் பயனுக்காகத் தோண்டி எடுக்கப்படுகிறது. புதர்ச்செடியான சர்ப்பகந்தாவின் இலைகளும் வேரும் மருத்துவப் பயன் கொண்டவை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Module 11: Ayurvedic". Archived from the original on 2007-12-14. பார்க்கப்பட்ட நாள் 2008-02-11.
- ↑ "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ eFloras. "Rauvolfia serpentina". Flora of China. Missouri Botanical Garden, St. Louis, MO & Harvard University Herbaria, Cambridge, MA. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Oudhia, P. and Tripathi, R.S. (2002).Identification, cultivation and export of important medicinal plants. In Proc. National Seminar on Horticulture Development in Chhattisgarh: Vision and Vistas. Indira Gandhi Agricultural University, Raipur (India) 21-23 Jan. 2002:78-85.