உள்ளடக்கத்துக்குச் செல்

சரோஜினி மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரோஜினி மேத்தா
Sarojini Mehta circa 1932
பிறப்பு1898
இறப்புMissing required parameter 1=month! 1977(1977-Missing required parameter 1=month!-00) (அகவை 78–79)
அறியப்படுவதுசமூக செயற்பாட்டாளர், கல்வியாளர் மற்றும் எழுத்தாளர்
உறவினர்கள்வினோதினி நீலகந்த் (சகோதரி)
[ சாரதே மேத்தா (அத்தை)

சரோஜினி மேத்தா (Sarojini Mehta 1898-1977) இந்தியாவின் குசராத்தைச் சேர்ந்த ஒரு குசராத்தி சிறுகதை எழுத்தாளர் ஆவார்.

இவர் சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் எழுத்தாளர்களான இராமன்பாய் நீலகாந்த் மற்றும் வித்யககௌரி நீலகாந்த் ஆகியோருக்கு 1898 இல் பிறந்தார். அவர் 1919 இல் பட்டம் பெற்றார் மற்றும் 1923 இல் இலண்டன் பொருளியல் பள்ளில் சமூகவியல் பயின்றார். அகமதாபாத்தில் உள்ள வனிதா விசுரமில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். [1]சுமந்த் மேத்தாவின் தம்பியான நானக் மேத்தாவை மணந்தார். [2]

ஏகாதசி (1935), சார் பதராணி மா (1953) மற்றும் வளதா பாணி (1962) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை எழுதினார்.சமூகம், குடும்பம், குழந்தை திருமணம் மற்றும் சமூகத்தில் பெண்களின் நிலை ஆகிய கருப்பொருள் குறித்து எழுதினார். [3]

சான்றுகள்

[தொகு]
  1. Chaudhari, Raghuveer, ed. (2005). "લેખિકા-પરિચય". વીસમી સદીનું ગુજરાતી નારીલેખન (in குஜராத்தி) (1st ed.). New Delhi: Sahitya Akademi. p. 351. ISBN 8126020350. OCLC 70200087.
  2. Marching to a Different Beat: The Nilkanths of Gujarat. Ahmedabad: Akshara Prakashan. 2013. ISBN 978-93-82255-35-2.
  3. Chaudhari, Raghuveer, ed. (2005). "લેખિકા-પરિચય". વીસમી સદીનું ગુજરાતી નારીલેખન (in குஜராத்தி) (1st ed.). New Delhi: Sahitya Akademi. p. 351. ISBN 8126020350. OCLC 70200087.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜினி_மேத்தா&oldid=3819189" இலிருந்து மீள்விக்கப்பட்டது