சரவண பவன் (உணவகம்)
![]() | |
வகை | தொடர் உணவகம் |
---|---|
வகை | தென்னிந்திய சைவ உணவுவகைகள் |
நிறுவுகை | 1981 |
நிறுவனர்(கள்) | பி. இராசகோபால் |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
அமைவிட எண்ணிக்கை | 46 |
சேவை வழங்கும் பகுதி | கனடா, இந்தியா, மலேசியா, ஓமன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரித்தானியா, அமெரிக்கா |
முதன்மை நபர்கள் | பி.ஆர். சிவகுமார் ஆர். சரவணன் |
இணையத்தளம் | www.saravanabhavan.com |
ஓட்டல் சரவண பவன் (Hotel Saravana Bhavan) 1981ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தென்னிந்திய சைவ உணவுவகைகள் வழங்கும் ஓர் தொடர் உணவக நிறுவனமாகும்[1]. சென்னையில் இருபத்தைந்து கிளைகளும் அமெரிக்கா, கனடா,இலண்டன், பாரிசு, சிங்கப்பூர், மலேசியா, மத்திய கிழக்கு என உலகெங்கும் வெளிநாட்டு விற்பனை உரிமை கிளைகளும் கொண்டுள்ளது. [2] [3].
முதல் உணவகம்
[தொகு]தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் புன்னை நகர் எனும் ஊரைச் சேர்ந்த பி. ராஜகோபால் என்பவர் சென்னை, கே. கே. நகர் பகுதியில் 1981 ஆம் ஆண்டில் டிசம்பர் 14 அன்று சரவண பவன் எனும் பெயரில் தொடங்கிய உணவகம்தான் இதன் முதல் உணவகமாகும்.
கிளைகள்
[தொகு]சரவண பவன் உணவகத்திற்கு சென்னையில் 25 கிளைகளும், காஞ்சிபுரம், புதுடெல்லி ஆகிய ஊர்களில் தலா இரு கிளைகளும், வேலூர் மற்றும் புன்னை நகர் ஆகிய ஊர்களில் ஒரு கிளையும் என மொத்தம் 31 கிளைகள் உள்ளன.
- இந்த உணவகத்திற்கு சென்னையில் கே.கே. நகர், திநகர், அசோக் நகர், ஜார்ஜ் டவுன், புரசைவாக்கம், வடபழனி (இரு கிளைகள்), அண்ணாநகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தி திரையரங்கக் கட்டிடம், பீட்டர்ஸ் சாலை, பாண்டி பஜார், சென்ட்ரல் தொடருந்து நிலையம், எழும்பூர், கடற்கரை தொடருந்து நிலையம், மயிலாப்பூர், அசோக் பில்லர், ஸ்பென்சர் பிளாசா, அசெண்டாஸ் தரமணி, வெங்கட நாராயணா சாலை, அண்ணா சாலை, ஆம்பிட் அம்பத்தூர் எனும் பகுதிகளில் கிளை உணவகங்கள் உள்ளன.
- இந்த உணவகத்திற்கு காஞ்சிபுரத்தில் இரு கிளைகளும், வேலூரில் ஒரு கிளையும், புதுடெல்லியில் ஜன்பத் மற்றும் கன்னாட் பிளேஸ் என்ற இரு பகுதிகளில் இரு கிளைகளும், திருச்செந்தூர் அருகிலுள்ள புன்னை நகரில் ஒரு கிளையும் உள்ளன.
வெளிநாட்டு விற்பனை உரிமை உணவகங்கள்
[தொகு]சரவண பவன் ஐக்கிய அரபு நாடுகளில் 9 இடங்களிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 6 இடங்களிலும், ஐரோப்பிய நாடுகளில் 4 இடங்களிலும், கனடாவில் 5 இடங்களிலும், மலேசியாவில் 4 இடங்களிலும், சிங்கப்பூரில் 4 இடங்களிலும், ஓமனில் ஒரு இடத்திலும், கதாரில் ஒரு இடத்திலும், பக்ரைனில் ஒரு இடத்திலும், பிரான்சில் ஒரு இடத்திலும் என 36 வெளிநாட்டு விற்பனை உரிமை உணவகங்களையும் கொண்டுள்ளது.
ஒளிப்படங்கள்
[தொகு]-
சென்னையில் சரவண பவனின் விநியோக ஊர்தி
-
சென்னை, இராதாகிருட்டினண் சாலையிலுள்ள இனிப்பு உணவகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Founder & Key Personalities". Saravana Bhavan. Archived from the original on 2007-05-24. Retrieved 2007-05-31.
- ↑ Berry, Rynn (2006). The Vegan Guide to New York City. Ethical Living. p. 27. ISBN 0978813200. Retrieved 2008-07-03.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Addison, Bill (2006-06-30). "Diners line up for Saravana dosas". San Francisco Chronicle. http://www.sfgate.com/cgi-bin/article.cgi?file=/c/a/2006/06/30/DDGIJJMG1K1.DTL&type=printable. பார்த்த நாள்: 2008-07-03.