சரவணப் பெருமாள் ஐயர்
Appearance
சரவணப் பெருமாள் ஐயர் தமிழ் உரையாசிரியர்களுள் ஒருவர். பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருத்தணியில் பிறந்த இவர் சமயத்தால் வீரசைவர்.
இராமாநுச கவிராயரிடம் கல்வி கற்ற[1] இவர் சென்னையில் பல காலம் தங்கியிருந்து நாலடியார், நன்னூல், வெங்கைக் கோவை, திருவள்ளுவமாலை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நன்னெறி, நறுந்தொகை, மூதுரை ஆகிய தமிழ் நூல்களுக்கு உரை எழுதினார். 1830 ஆம் ஆண்டில் திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு விளக்கம் எழுதிப் பதிப்பித்தார்.
நைடதம் மற்றும் பிரபுலிங்கலீலை ஆகிய இரு நூலுக்கும் உரை இயற்றத் தொடங்கி முடிக்காமல் மறைந்தார். அவற்றின் பிற் பகுதிகளுக்கு இவரது மகன் கந்தப்ப ஐயர் உரை எழுதி முடித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி". பார்க்கப்பட்ட நாள் April 24, 2012.