உள்ளடக்கத்துக்குச் செல்

சமாரியம் டெட்ராபோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமாரியம் டெட்ராபோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சமாரியம் டெட்ராபோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/4B.Sm
    Key: IXWQBERMPYCDNG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Sm].[B].[B].[B].[B]
பண்புகள்
SmB4
வாய்ப்பாட்டு எடை 193.60 கி/மோல்
அடர்த்தி 6.1 கி/செ.மீ3
உருகுநிலை 2,400 °C (4,350 °F; 2,670 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சமாரியம் டெட்ராபோரைடு (Samarium tetraboride) என்பது SmB4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் போரானும் சேர்ந்து கருப்பு நிறப் படிகங்களாக இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

2400 பாகை செல்சியசு வெப்பநிலையில் சமாரியம் மற்றும் போரான் தனிமங்கள் நேரடியாக வினையில் ஈடுபட்டு சமாரியம் டெட்ராபோரைடு உருவாகிறது.

Sm + 4B → SmB4

பண்புகள்

[தொகு]

சமாரியம் டெட்ராபோரைடு செஞ்சாய்சதுரப் படிகத் திட்டத்தில் படிகங்களாக உருவாகிறது. P4/mbm என்ற இடக்குழுவில் a = 0.7174 நானோமீட்டர், c = 0.40696 நானோமீட்டர், Z = 4, என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் தோரியம் டெட்ராபோரைடு படிக அமைப்பையும் கொண்டுள்ளது.[1][2][3][4][5]

திண்மநிலை மற்றும் திரவநிலை ஒன்றாகச் சேர்ந்து இரண்டாவது திண்மநிலையை உருவாக்கும் வினையான பெரிடெக்டிக் வினையில் 2400 பாகை செல்சியசு வெப்பநிலையில் சமாரியம் டெட்ராபோரைடு உருவாகிறது.[1]

25 கெல்வின் மற்றும் 7 கெல்வின் வெப்பநிலைகளில் இச்சேர்மத்தில் காந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Диаграммы состояния двойных металлических систем. Vol. 1. М.: Машиностроение. Под ред. Н. П. Лякишева. 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-217-02688-X.
  2. Самсонов Г.В., Серебрякова Т.И., Неронов В.А. (1975). Бориды. М.: Атомиздат.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Predel, B. (2012), Predel, B. (ed.), "B - Sm (Boron - Samarium): phase equilibria, crystallographic and thermodynamic data of binary alloys", B - Ba … Cu - Zr (in ஆங்கிலம்), Berlin, Heidelberg: Springer Berlin Heidelberg, vol. 12B, p. 73, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-540-44756-6_37, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-44753-5, பார்க்கப்பட்ட நாள் 2024-05-15
  4. Predel, B. (1992), Madelung, O. (ed.), "B-Sm (Boron-Samarium)", B-Ba – C-Zr, Landolt-Börnstein - Group IV Physical Chemistry (in ஆங்கிலம்), Berlin/Heidelberg: Springer-Verlag, vol. 5b, pp. 1–2, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10040476_390, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-55115-7, பார்க்கப்பட்ட நாள் 2024-05-15
  5. Liao, P. K.; Spear, K. E.; Schlesinger, M. E. (Aug 1996). "The B-Sm (boron-samarium) system" (in en). Journal of Phase Equilibria 17 (4): 347–350. doi:10.1007/BF02665562. பன்னாட்டுத் தர தொடர் எண்:1054-9714. http://link.springer.com/10.1007/BF02665562. 
  6. Kim, J. Y.; Sung, N. H.; Kang, B. Y.; Kim, M. S.; Cho, B. K.; Rhyee, Jong-Soo (2010-05-01). "Magnetic anisotropy and magnon gap state of SmB4 single crystal" (in en). Journal of Applied Physics 107 (9). doi:10.1063/1.3365061. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8979. https://pubs.aip.org/jap/article/107/9/09E111/920053/Magnetic-anisotropy-and-magnon-gap-state-of-SmB4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்_டெட்ராபோரைடு&oldid=4060594" இலிருந்து மீள்விக்கப்பட்டது