சமான் சர்வதேச பள்ளி
சமான் சர்வதேச பள்ளி Zaman International School | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
புனோம் பென் கம்போடியா | |
தகவல் | |
வகை | தனியார் |
குறிக்கோள் | எங்களுடன் இணைந்து நீங்கள் மேன்மையடையப் போகிறீர்கள்! |
தொடக்கம் | 2000 |
நிறுவனர் | அடில்லா யூசுப் குலேகர் |
இயக்குனர் | அலி கோக்தென் |
அதிபர் | ஆதெம் இல்டிசு |
இணையம் | www.zamanisc.com |
சமான் சர்வதேச பள்ளி (Zaman International School ) என்பது கம்போடியா தலைநகர் புனோம் பென்னில் இருக்கும் ஒரு தனியார் பன்மொழி சர்வதேச பள்ளி ஆகும். இப்பள்ளியானது 1997 ஆம் ஆண்டு சமான்[1] என்ற துருக்கிய தினசரி பத்திரிகையின் முன்னாள் பத்திரிகையாளரால்[2] நிறுவப்பட்டது. சமான் சர்வதேச பள்ளி, இசுலாமியர்களின் குலென் இயக்கத்துடன் தொடர்பு கொண்ட ஒரு பள்ளி என இணையதள ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.[3]
இப்பள்ளியில் குழந்தைகளுக்கு கே1 முதல் 12 ஆவது வரையிலான கல்வி அளிக்கப்படுகிறது. அனைத்துப் பாடங்களும் ஆங்கிலம் மற்றும் கெமெர் மொழிகளில் கற்பிக்கப்படுகின்றன. புனோம் பென்னில் உள்ள தொன்லே பாசாக் பகுதியில் புதிதாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட கட்டிடத்தில் இம்மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. வைக்கப்பட்டுள்ளது. 7 ஆம் நிலையில் இருந்து 12 ஆம் நிலை வரை பயிலும் மாணவர்கள் இவ்வளாகத்தில் கல்வி கற்கின்றனர். சமான் தொடக்கப்பள்ளி புனோம் பென்னில் உள்ள தௌல் கோர்க் பகுதியில் அமைந்துள்ளது.
சமான் சர்வதேச பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச கல்வித் தகுதிகள் கிடைக்கின்றன. 9 ஆம் நிலை மற்றும் 12 ஆம் நிலை மாணவர்களுக்கு இரண்டு தேசிய அளவிலான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கேம்பிரிட்ச்சின் சர்வதேச பள்ளிக்கல்வி பொதுச் சான்றிதழ் படிப்புக்குச் செல்வதற்காக சர்வதேசப்பகுதி மாணவர்களுக்கு ஒரு தேர்வும் 10 அல்லது 11 மற்றும் 12 ஆம் நிலைகளுக்குச் செல்வதற்கான தரம் ஏ தேர்வு என்ற மற்றோரு தேர்வும் இங்கு நடத்தப்படுகின்றன. தனது நாட்டில் உள்ள துருக்கியப் பள்ளிகள் துருக்கி மற்றும் கம்போடியா இடையே பாலங்களாகச் செயல்படுகின்றன[4] என்று கம்போடிய பாதுகாப்பு அமைச்சரகத்தின் செய்தித்தொடர்பாளர் தளபதி சும் சோச்சீட் கூறுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Deputy PM Arınç opens Zaman University in Cambodia". Todayszaman.com. 2011-02-22. Archived from the original on 2013-07-28. Retrieved 2013-05-13.
- ↑ "Zaman International School Inauguration Mr. Atilla Yusuf Guleker". YouTube. Retrieved 2013-05-13.
- ↑ [1]
- ↑ "Cambodian General: Turkish schools are building bridges between two countries". HizmetMovement.org. 2014-07-25. Retrieved 2014-10-20.