சபர்மதி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபர்மதி ஆறு
River
சபர்பதி ஆற்றங்கரையில் அகமதாபாத் நகரம்
நாடு இந்தியா
மாநிலங்கள் குசராத், ராஜஸ்தான்
கிளையாறுகள்
 - இடம் Wakal river, Sei Nadi, Harnav River, Hathmati River, Watrak River
நகரங்கள் அகமதாபாத், காந்திநகர்
உற்பத்தியாகும் இடம் Dhebar lake, Rajasthan
 - அமைவிடம் ஆரவல்லி மலைத்தொடர், உதய்ப்பூர் மாவட்டம், ராஜஸ்தான், இந்தியா
 - உயர்வு 782 மீ (2,566 அடி)
நீளம் 371 கிமீ (231 மைல்)

சபர்மதி ஆறு இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஆறு ஆகும். இது 371 கிமீ நீளமுடையது.[1] இது இராஜஸ்தான் மாநில உதயப்பூர் மாவட்டத்திலுள்ள ஆரவல்லி குன்றில் உற்பத்தியாகிறது. ஆறு துவங்கும் இடத்தில் இதனை வாகல் என்றும் அழைக்கிறார்கள்.[2][3]

பெரும்பகுதியான ஆறானது குஜராத் மாநிலத்தில் பாய்ந்து அரபிக் கடலிலுள்ள காம்பே வளைகுடாவில் கலக்கிறது. குஜராத்தின் பெருநகரங்களான அகமதாபாத், காந்திநகர் ஆகியவை இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. மகாத்மா காந்தி அவர்களின் சபர்மதி ஆசிரமம் இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Singh, Dhruv Sen, ed. (2018). The Indian rivers : scientific and socio-economic aspects. Springer Nature Singapore. p. 466.
  2. Water Year Book 2011-12: Mahi, Sabarmati & Other West Flowing Rivers (PDF). Gandhinagar: Central Water Commission. 2012. p. 14.
  3. Jain, S. K.; Agarwal, Pushpendra K; Singh, V. P. (2007). Hydrology and water resources of India. Dordrecht: Springer. pp. 589–579. Bibcode:2007hwri.book.....J.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபர்மதி_ஆறு&oldid=3959522" இலிருந்து மீள்விக்கப்பட்டது