சந்தி (நாடகம்)
சந்தி என்பது நாடகவியலில் நாடகத்தின் கதையைப் பிரித்து அமைக்கும் பிரிவு ஆகும்.[1]இதனை அங்கம் எனவும் கூறுவர். பொதுவாக நாடகத்தின் கதையை ஐந்து சந்தியாகப் பிரிப்பர். இதனடிப்படையிலேயே ஓர் சந்தி அதாவது ஒரு பிரிவு மட்டுமே கொண்ட நாடகம் ஓரங்க நாடகம் எனப்பட்டது.
சந்தி வகைகள்
[தொகு]- முகம்
- பயிர்முகம்
- கருப்பம்
- விளைவு
- துய்த்தல்
முகம்
[தொகு]உழுத நிலத்தில் விதைக்கப்பட்ட விதை முளையாகத் தோன்றுவது போல, நாடகக் கதையின் போக்கு அறியப்படுமாறு அமைப்பது முகம் எனப்படும் பிரிவாகும்.
பயிர்முகம்
[தொகு]முளைத்த நாற்று இலைவிடுவது போன்று நாடகத்தின் கதை வளர்வது பயிர்முகம் எனப்படும்.[2]
கருப்பம்
[தொகு]வளர்ந்த பயிர் கருக்கொண்டு கதிர்விடுவது போல் நாடகக் கதையின் கருத்துத் தோன்றும்படி அமைப்பது கருப்பம் எனப்படும்.
விளைவு
[தொகு]கதிர் திரண்டு முற்றி மணியாகி அறுவடைக்கு ஆயத்தாமாகி இருப்பது போல நாடகப் பொருள் நன்கு விளங்க அமைப்பது.[3]
துய்த்தல்
[தொகு]முற்றி விளைத்த கதிர்களை அறுவடை செய்து நெல்மணிகளைக் கொண்டு போய் உண்டு மகிழ்வது போல நாடகக் கதையின் முழுக்கருத்தும் தோன்ற அமைப்பது துய்த்தல் எனப்படும். [4]
இவ்வாறு ஐந்து சந்திகளாக நாடகத்தின் கதை அமைய வேண்டும் என நாடகத்தமிழ் இலக்கண நூல்கள் கூறுகின்றன.
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு. 2012. p. 115, 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7735-492-2
- ↑ அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் இதனைப் பிரதிமுகம் எனக் குறிப்பிடுகிறார். வீரசோழியம் உரையாசிரியர் பெருந்தேவனார் இதனைப் பயிர்முகம் எனக் குறிப்பிடுகிறார்.(பொருளதிகாரம் 21 ஆம் கலித்துறை உரை)
- ↑ விளைவு என அடியார்க்கு நல்லாரும் பெருந்தேவனார் விமரிசம் அல்லது வைரிமுகம் என்றும் கூறுவார்.(வீர சோழியம்-பொருளதிகாரம் 31 ஆம் கலித்துறை உரை)
- ↑ பெருந்தேவனார் இதனை நிருவாணம் என்பார். (வீர சோழியம்-பொருளதிகாரம் 21 ஆம் கலித்துறை உரை)