சந்திர பிரியங்கா
சந்திர பிரியங்கா | |
---|---|
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2016 மே | |
முன்னையவர் | எம். சந்திரகாசு |
தொகுதி | நெடுங்காடு சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1989[1] |
அரசியல் கட்சி | அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் |
வாழிடம் | காரைக்கால் |
முன்னாள் கல்லூரி | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (பிபிஏ) |
எஸ். சந்திர பிரியங்கா என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அகில இந்திய என். ஆர் காங்கிரசைச் சேர்ந்தவர். 2016 மேயில், இவர் நெடுங்காடு தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3] [4] 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் ஏ. மாரிமுத்துவை 8,560 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். [5] இதையடுத்து ரங்கசாமியின் நான்காவது அமைச்சரவையில் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதி, தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு, கலை மற்றும் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இவர் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் எம். சந்திரகாசுவின் மகளாவார். 2019 ஆம் ஆண்டில் ஜான்சி என்ற குறும்படத்தில் சந்திர பிரியங்கா நடித்துள்ளார்.
2023 அக்டோபர் 10, அன்று, சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது ராஜினாமா கடிதத்தை தனது செயலாளர் மூலம் முதலமைச்சர் அலுவலகத்திற்கு சமர்ப்பித்தார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/jun/28/interview-will-work-for-rights-of-women-puducherry-ministerchandira-priyanga-2322390.html
- ↑ "NEDUNGADU ASSEMBLY ELECTION RESULTS". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "Puducherry assembly election: All India NR Congress releases candidate list, N Rangasamy to contest from 2 seats". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "LIVE: Election Results 2021 Puducherry". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
- ↑ The Hindu (10 October 2023). "Puducherry Transport Minister Chandira Priyanga submits resignation, alleges caste discrimination" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 11 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231011023337/https://www.thehindu.com/news/cities/puducherry/puducherry-transport-minister-chandira-priyanga-submits-resignation-alleges-caste-and-gender-discrimination/article67403478.ece.