உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திர சேகர் கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திர சேகர் கோசு (Chandra Shekhar Ghosh) இந்தியாவின் திரிபுராவில் உள்ள பிசல்கரில் 1960 இல் பிறந்த இவர் பந்தன் வங்கியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமாவார்.[1]

ஆரம்ப ஆண்டுகள்

[தொகு]

இவரது தந்தை அரிபாதா கோசு திரிபுராவில் ஒரு இனிப்பு கடை வைத்திருந்தார். [2] கல்லூரியில் படித்துக் கொண்டே தனது தந்தைக்கு கடையில் உதவி புரிந்தார். தாக்கா பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் தனது முதுகலைப் பட்டம் பெற்றார். கல்வியை முடித்த பின்னர் இவர் வங்காளதேசத்தில் அரசு சாரா அமைப்பான வங்காளதேசம் ஊர் முன்னேற்ற செயற்குழுவில் சேர்ந்தார். இந்தியா திரும்பிய பிறகு, இவர் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பணிபுரிந்தார். இவர் கிராம நலச் சங்கத்தில் தனது வேலையை விட்டுவிட்டு, மேற்கு வங்கத்தில் பந்தன்-கொன்னகர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினார். முறையான வங்கி சேவைகளால் உதவாத பகுதிகளில் சிறு உதவிக்குழுக்கள் மூலம் மகளிருக்கு கடன் வழங்குவதற்கும், தொழில் முனைவோர்களை மேம்படுத்தையும் நோக்கமாகக் கொண்டது. [3]

பந்தனும், பந்தன் வங்கியும்

[தொகு]

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 2001 ஆம் ஆண்டில் 2,00,000 ரூபாய் மூலதனத்துடன் மூன்று ஊழியர்களுடன் பந்தன்-கொன்னகரைத் தொடங்கினார். 2009 ஆம் ஆண்டில், தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சிறுநிதி நிறுவனமாக இருந்த தனது நிறுவனத்தை வங்கிசாரா நிதி நிறுவனமாக மாறியது. 2010 ஆம் ஆண்டில், பந்தன் இந்தியாவின் மிகப்பெரிய சிறுநிதி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது. [4]

2014 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி பந்தனுக்கு வங்கி உரிமத்திற்கான ஒப்புதல் வழங்கியது. [5][6][7] பந்தன் வங்கி 2015 ஆகத்து 23 அன் அன்று உருவானது. கோசு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனருமாகவும் இருந்தார். ஒரு சிறுநிதி நிறுவனத்திற்கு இந்தியாவில் வங்கி உரிமம் கிடைத்த முதல் நிகழ்வு இதுவேவாகும். சுதந்திரத்திற்குப் பிறகு கிழக்கு இந்தியாவில் ஒரு உலகளாவிய வங்கி அமைக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்.

தொழில் இணைப்புகள்

[தொகு]

கிழக்கு பிராந்தியத்தின் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவராகவும், அதன் பொருளாதார விவகாரங்கள், நிதி மற்றும் வரிவிதிப்புக் குழுவின் தலைவராகவும் இருந்த இவர், தற்போது அந்த கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ளார். மேலும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) நிதி சேர்க்கைக் குழுவின் இணைத் தலைவராகவும் உள்ளார். இவர் வங்காள வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் (பி.சி.சி & ஐ) தலைவராக இருந்தார்.

விருதுகள்

[தொகு]
  • மூத்த அசோகா சகா - 2007 [8]
  • போர்ப்ஸ் இதழின் சமூக தாக்கத்துடன் கூடிய தொழில்முனைவோர் விருது, 2014 [9]
  • 2014 ஆம் ஆண்டின் இடி தொழில்முனைவோர் விருது [10]
  • ஒரு தனிநபரால் சிறுநிதித் துறைக்கு வாழ்நாள் பங்களிப்பு - 2015
  • வங்கியில் சிறந்து விளங்கிய ச.ரங்கராஜன் விருது - 2017
  • வணிக உலக மாக்னா விருதுகள் - 2019 ஆம் ஆண்டின் வங்கியாளர் [11]

குடும்பம்

[தொகு]

கோசு, தனது மனைவி நீலிமா, 21 வயது மகன் அன்சுமான் ஆகியோருடன் கொல்கொத்தாவில் வசித்து வருகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Meet Bandhan CMD Chandra Shekhar Ghosh, the man who pipped Birlas and Ambanis for a bank license". The Economic Times. http://articles.economictimes.indiatimes.com/2015-01-28/news/58547171_1_bandhan-financial-chandra-shekhar-ghosh-bank-license. பார்த்த நாள்: 26 February 2015. 
  2. "Bandhan founder Chandra Shekhar Ghosh: From sweet shop to bank owner". The Economic Times. http://articles.economictimes.indiatimes.com/2014-04-04/news/48867133_1_chandra-shekhar-ghosh-bandhan-bank-licence. பார்த்த நாள்: 26 February 2015. 
  3. "Chandra Shekhar Ghosh's Bandhan banks on building ties with the underprivileged". Forbes. பார்க்கப்பட்ட நாள் 26 February 2015.
  4. "Bandhan microfinance overtakes SKS as India's largest MFI - News Digest". India Microfinance (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-11-15. பார்க்கப்பட்ட நாள் 2019-09-24.
  5. "For Chandra Shekhar Ghosh, it was not easy to start off Bandhan". Business Today. http://businesstoday.intoday.in/story/bndhans-chandra-shekhar-ghosh-rags-to-riches-journey/1/205444.html. பார்த்த நாள்: 26 February 2015. 
  6. "Chandra Shekhar Ghosh, microlender to banker who beat titans". The Hindustan Times இம் மூலத்தில் இருந்து 26 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150226165231/http://www.hindustantimes.com/business-news/chandra-shekhar-ghosh-microlender-to-banker-who-beat-titans/article1-1216523.aspx. பார்த்த நாள்: 26 February 2015. 
  7. "Lunch with BS: Chandra Shekhar Ghosh". Business Standard. http://www.business-standard.com/article/opinion/lunch-with-bs-chandra-shekhar-ghosh-112090400002_1.html. பார்த்த நாள்: 26 February 2015. 
  8. "Winners - 2007". Ashoka | Awards.
  9. "Winners - 2014". Forbes India. பார்க்கப்பட்ட நாள் 26 February 2015.
  10. "ET Awards 2014: Chandra Shekhar Ghosh is Entrepreneur of the Year for building Bandhan from scratch". The Economic Times. http://articles.economictimes.indiatimes.com/2014-10-01/news/54516950_1_bandhan-financial-services-chandra-shekhar-ghosh-banking-licence. பார்த்த நாள்: 26 February 2015. 
  11. Jha, Suman K. "We Need More Bandhans Across India, Says Chandra Shekhar Ghosh". BW Businessworld (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திர_சேகர்_கோசு&oldid=3242861" இலிருந்து மீள்விக்கப்பட்டது