உள்ளடக்கத்துக்குச் செல்

சதிகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்நாடகத்தின் பெல்காமின் கேதரேஸ்வரர் கோயிலில் உள்ள ஒரு சதிகல்

சதிகல், மஹாஸதி கல் அல்லது மாஸ்தி கல் (கன்னடம் தோள் கொடுத்தல், கேரளத்தில் புலைச்சிக் கல் அல்லது படைக் கல்) என்றும் கூறப்படுகின்றது. இறந்துபட்ட கணவனோடு தீப்பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி மற்றும் கணவன் என இருவருக்கும் நடப்படும் நினைவுச் சின்னம் ஆகும். கணவன் சிதையுடன் மனைவியும் உடன்கட்டை ஏறுவது வட இந்தியாவில் எளிய மக்களிடத்தும் நிலவிய குமுக வழக்கமாக இருந்தது. ஆனால் தென்னிந்தியாவில் இந்த வழக்கம் அரசர், அமைச்சர், படைத் தலைவர் குடும்பங்களில் மட்டுமே நிலவியது. இவ்வாறு தீப்பாய்ந்து இறந்த பெண்கள் தெய்வமாக மதிக்கப்பட்டுப் பூசிக்கப்பட்டனர்.[1]

சதிக்கல் அமைப்பு

[தொகு]

சதிகல்லில் வீரனின் உருவம் இருக்கும். தீப்பாய்ந்து இறந்த வீரனின் மனைவி உருவம் இருக்கும். அதே போன்று மூன்று பெண் உருவங்கள் ஒரு கல்லில் இடம்பெற்றிருக்கும். இரண்டு பெண்களின் உருவத்திற்கு நடுவில் இறந்த வீரனின் உருவம் சில கற்களில் இடம் பெற்றிருக்கும். சில கற்களின் பின்புறம் வீரனின் சிலையும் இருக்கும். இது போன்ற கற்களின் அருகே மூன்று பெண்கள் கைக்கூப்பி இருப்பது போன்று கல்லில் செதுக்கப்பட்டு இருக்கும். இவர்களை அப்சரப் பெண்கள் (வான மங்கையர்) என்பர். இறந்தவர்களை வான மங்கையர் கைகூப்பி வீரர் உலகிற்கு அழைத்துச் செல்வர் என்ற நம்பிக்கையில் இவ்வகைக் கற்களில் இவர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.[2]

தமிழிலக்கியத்தில் சதி

[தொகு]

தொல்காப்பியம்

[தொகு]

கணவன் இறந்தவுடன் மனைவி தீப்பாய்ந்து இறத்தலைப் பற்றி தொல்காப்பியம் நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇச் என்று புறத்திணையில் கூறுகிறது.[3]

புறநானூறு

[தொகு]

பூதப்பாண்டியனின் மனைவி பெருங்கோப்பெண்டு தனது கணவன் இறந்த செய்தி அறிந்து தானும் தீப்பாய்ந்து இறந்ததை புறநாற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.[4]

- - - - - - - - - - - - -
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
247

இதன் பொருள்

கைம்மை நோன்பு இருக்கும் பெண்களைப் போன்றவள் அல்ல நான் ஈமப்படுக்கை உங்களுக்கு அரிதாகத் தோன்றலாம்; எனது கணவன் இறந்து விட்டான் எனவே எனக்கு தீயானது தாமரைக்குளத்து நீர்போல இன்பம் தருவதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சதிக்கல்". கல்வெட்டு. தமிழ் மரபு அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. கோ.ஜெயக்குமார் (சூலை 2017). "சதிகற்களும் நம்பிக்கைகளும்". உங்கள் நூலகம். http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/3667-ungal-noolagam-jul17/33491-2017-07-21-09-23-36?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29. 
  3. தொல்காப்பியம்/பொருளதிகாரம்/புறத்திணையியல்
  4. பொய்கையும் தீயும் ஒன்றே!

இதனையும் காண்க

[தொகு]

நடுகல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதிகல்&oldid=3641488" இலிருந்து மீள்விக்கப்பட்டது