சதார் பசார் விளையாட்டரங்கம்
Appearance
சதார் பசார் விளையாட்டரங்கம் Sadar Bazar Stadium | |
---|---|
முழு பெயர் | சதார் பசார் விளையாட்டரங்கம் |
இடம் | ஆக்ரா, இந்தியா |
எழும்பச்செயல் ஆரம்பம் | 1934 |
திறவு | 1934 |
சீர்படுத்தது | 1993 |
உரிமையாளர் | |
குத்தகை அணி(கள்) | உத்தரப்பிரதே துடுப்பாட்ட அணி (1966-1987) |
அமரக்கூடிய பேர் | 5,000 |
சதார் பசார் விளையாட்டரங்கம் (Sadar Bazar Stadium ) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ரா நகரில் அமைந்துள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கமாகும். துடுப்பாட்டம், கால்பந்தாட்டம் மற்றும் இதர விளையாட்டுகள் இங்கு பிரதானமாக நடைபெறுகின்றன. [1] இந்த அரங்கத்தில் 1934 ஆம் ஆண்டில் 17 ரஞ்சி கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. [2] ஒருங்கிணைந்த மாகாண துடுப்பாட்ட அணி தில்லி துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய ரஞ்சிக் கோப்பை போட்டியில் தில்லி தனது முதலாவது இன்னிங்சில் 37 ஓட்டங்களுக்கு அனைத்து ஆட்டக்காரர்களையும் இழந்தது.[3]. 1966 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை மேலும் 16 போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. ஆனால் அதன் பின்னர் அரங்கத்தில் எந்த துடுப்பாட்ட போட்டியும் நடைபெறவில்லை.