சஞ்சிப் பானர்ஜி
மாண்புமிகு தலைமை நீதியரசர் சஞ்சிப் பானர்ஜி | |
---|---|
தலைமை நீதிபதி மேகாலயா உயர் நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 நவம்பர் 2021 | |
பரிந்துரைப்பு | என். வி. இரமணா |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
முன்னையவர் | அமர்சன்ச சிங் தங்கிவ் (பொறுப்பு த. நீ. |
தலைமை நீதிபதி மதராசு உயர் நீதிமன்றம் | |
பதவியில் 4 சனவரி 2021 – 17 நவம்பர் 2021 | |
பரிந்துரைப்பு | எஸ். ஏ. பாப்டே |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் |
முன்னையவர் | அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி |
பின்னவர் | எம். துரைசாமி (பொறுப்பு த. நீ. |
நீதிபதி, கல்கத்தா உயர் நீதிமன்றம் | |
பதவியில் 22 ஜீன் 2006 – 3 சனவரி 2021 | |
பரிந்துரைப்பு | யோகேசு குமார் சபார்வால் |
நியமிப்பு | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 நவம்பர் 1961 |
முன்னாள் கல்லூரி | தூய பால் பள்ளி, டார்ஜீலிங். கொல்கத்தா பல்கலைக்கழகம் |
சஞ்சிப் பானர்ஜி (Sanjib Banerjee)(பிறப்பு: நவம்பர் 2, 1961) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றுகிறார். முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார்.[1][2]
பணி
[தொகு]பானர்ஜி தனது பள்ளிப்படிப்பை டார்ஜீலிங்கில் உள்ள தூய பால் பள்ளியில் பயின்றார். 1983-ல் பொருளாதாரத்தில் ஆனர்சுடன் இளம் அறிவியல் மற்றும் இளங்கலைச் சட்டம் (எல். எல். பி.) பட்டத்தினை 1986-87-ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெற்றார். பானர்ஜி, தி டெலிகிராப் பத்திரிகையில் விளையாட்டுப்பிரிவு செய்தியாளராக பணியினைத் துவங்கினார். பின்னர் பானர்ஜி, 1990 நவம்பர் 21 அன்று வழக்கறிஞராகப் பணியாற்றிடப் பதிவு செய்தார். பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். 22 ஜூன் 2006 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றர். இதன் பின்னர், 31 டிசம்பர் 2020 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 4 ஜனவரி 2021 அன்று பதவியேற்ற பானர்ஜி நவம்பர் 17, 2021 அன்று மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Emmanuel, Meera. "A Chief Justice is first a judge and only then a Chief: Madras High Court's newly sworn in Chief Justice Sanjib Banerjee". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-04.
- ↑ Bench, Bar &. "[Breaking] Chief Justices S Muralidhar, Hima Kohli, Sanjib Banerjee appointed for High Courts of Orissa, Telangana, Madras". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-31.
- ↑ "Amid protests by advocates, Centre notifies transfer of Madras HC Chief Justice Sanjib Banerjee". The Indian Express (in ஆங்கிலம்). 2021-11-15. பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.