சச்சைக்காய் சில்லி
Appearance
சச்சைக்காய் சில்லி விளையாட்டு சிறுவர் சிறுமியரால் தெருவில் விளையாடப்படும்.
சீய்த்தக்காயைச் சச்சைக்காய் என்கின்றனர். சில்லை எறியும்போது சீய்ந்து விழும் காய்கள் இவை. கோழி மண்ணைக் காலால் சீய்க்கும். பின்புறமாகச் சீய்க்கும். இந்த விளையாட்டில் சில்லி முன்புறமாக எறியப்பட்டுக் காய்கள் சீய்க்கப்படும்.தீப்பெட்டிகள், சிகரெட் பெட்டிகள் போன்றவை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படும். சில்லி சீய்த்துத் தனியே கிடக்கும் பெட்டிகள் சீய்த்தவருக்கு உடைமையாகும். அதிகம் ஈட்டியவர் வென்றவர்.
காட்சி
[தொகு]மேலும் பார்க்க
[தொகு]கருவிநூல்
[தொகு]- தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, 1954