உள்ளடக்கத்துக்குச் செல்

சசி பாஞ்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சசி பாஞ்சா
3ஆவது மம்தா அமைச்சரவை, மேற்கு வங்காள அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
10 மே 2021
ஆளுநர்ஜகதீப் தன்கர்
இல. கணேசன் (கூடுதல் பொறுப்பு)
சி. வி. ஆனந்த போசு
முதலமைச்சர்மம்தா பானர்ஜி
துறை
இரண்டாவது மம்தா அமைச்சரவை, மேற்கு வங்காள அரசு
பதவியில்
2016–2021
ஆளுநர்கேசரிநாத் திரிபாதி
ஜகதீப் தன்கர்
துறை
முதலமைச்சர்மம்தா பானர்ஜி
முன்னையவர்சபித்ரி மித்ரா
பின்னவர்அமைச்சர்
சட்டமன்ற உறுப்பினர் மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2011
முன்னையவர்ஜிபன் பிரகாசு சா
தொகுதிசியாம்புகூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 அக்டோபர் 1962 (1962-10-04) (அகவை 62)
கொல்கத்தா, மேற்கு வங்காளம்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
துணைவர்பிரசுன் குமார் பாஞ்சா
பிள்ளைகள்பூஜா & நம்ரத்தா
வாழிடம்(s)250 சித்தரஞ்சன் பகுதி, கொல்கத்தா-700006
முன்னாள் கல்லூரிஇரா. கோ. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை

சசி பாஞ்சா ஒரு மருத்துவரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் தற்போது மேற்கு வங்க அரசாங்கத்தின் தொழில்கள், வர்த்தகம் மற்றும் நிறுவனங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத் துறைக்கான அமைச்சரவை அமைச்சராகப் பணியாற்றுகிறார்.

இளமை

[தொகு]

ஆந்திராவின் தெனாலி நகரைச் சேர்ந்த தெலுங்கு குடும்பத்தில் பாஞ்சா பிறந்தார். இவரது தந்தை பிள்ளலமாரி டி கிருஷ்ணையா இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தலைமை தொழில்துறை பொறியாளராக இருந்தார். கொல்கத்தாவில் உள்ள இரா. கோ. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அல்ட்ராசவுண்ட் மற்றும் கருவுறாமை பயிற்சியில் நிபுணத்துவத்துடன் இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் கல்வியினை முடித்தார். இவர் மூத்த அரசியல்வாதி அஜித் குமார் பாஞ்சாவின் மகன் பிரசுன் குமார் பாஞ்சாவை மணந்தார்.[1][2][3]

அரசியல்

[தொகு]

2010ஆம் ஆண்டில் கொல்கத்தா மாநகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஞ்சா, கல்விப் பொறுப்பில் மாநகரக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[4]

பாஞ்சா 2011இல் சியாம்புகூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே தொகுதியிலிருந்து 2016 மற்றும் 2021-இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

பாஞ்சா மேற்கு வங்க அமைச்சரவையில் மாநில அமைச்சராகச் சேர்க்கப்பட்டார். திசம்பர் 2013-இல் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது.[6] மே 2014-இல், சமூக நலத்துறையின் கூடுதல் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.[7]

2021ஆம் ஆண்டில் மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்க மாநிலத்தின் 21வது அமைச்சரவைக் குழுவின் ஒரு அமைச்சராகப் பதவியேற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sashi Panja:HM's own girl". Drishtikon, 17 May 2011. 16 May 2011. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
  2. "Election Watch Reporter". My neta. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
  3. "লোকসভার নিরিখে এগিয়ে BJP, খেলা ঘোরাতে পারবেন অজিত পাঁজার পুত্রবধূ?".
  4. "Know Your MLA". The Telegraph (Calcutta). 17 May 2011 இம் மூலத்தில் இருந்து 25 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140725225242/http://www.telegraphindia.com/1110517/jsp/calcutta/story_13992161.jsp. பார்த்த நாள்: 17 July 2014. 
  5. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
  6. "Three new ministers take oath at Raj Bhavan, state cabinet reshuffled". All India Trinamool Congress, 26 December 2013. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
  7. "Bratya shifted to tourism, Partha new education minister, Mitra to see IT also". The Statesman. 28 May 2014. Archived from the original on 27 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசி_பாஞ்சா&oldid=4116389" இலிருந்து மீள்விக்கப்பட்டது