சங்கீதா சங்கர்
முனைவர் சங்கீதா சங்கர் | |
---|---|
பிறப்பு | 12 ஆகத்து 1965 |
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | வயலின் கலைஞர், இசையமைப்பாளர், தொழில் முனைவு, பேராசிரியர் |
இசைக்கருவி(கள்) | வயலின் |
இசைத்துறையில் | 41 |
இணையதளம் | www.sangeetashankar.com |
முனைவர் சங்கீதா சங்கர் (Sangeeta Shankar) இவர் இந்துஸ்தானி பாரம்பரிய இசையை நிகழ்த்தும் இந்திய வயலின் கலைஞர் ஆவார். இவர் தற்போது மும்பையில் வசிக்கிறார்.
மக்கள் பெரும்பாலும் இவரது இசையை "பாடும் வயலின்" என்று குறிப்பிடுகிறார்கள். இவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் டி. என். கிருட்டிணனின் உறவினர் ஆவார். மேலும், வயலின் கலைஞர்கள் இராகினி சங்கர் மற்றும் நந்தினி சங்கர் இவரது மகள்கள் ஆவர்.
கல்வி
[தொகு]சங்கீதா சங்கர் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் இசையில் பட்டம் பெற்றுள்ளார்.
பயிற்சி
[தொகு]சங்கீத சங்கர், என்.ராஜம் மற்றும் டி.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோருக்கு இசைக் குடும்பத்தில் வாரணாசியில் பிறந்தார். சங்கீதா தனது தாயின் பயிற்சியின் கீழ் இந்துஸ்தானி இசையில் மிகச் சிறிய வயதிலேயே தனது பயிற்சியைத் தொடங்கினார்.
தொழில்
[தொகு]இவர் முதலில் 8 வயதில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தனது இசை நிகழ்ச்சியைத் தொடங்கினார். இவர் தனது 13 வயதில் தனது தாயுடன் நிகழ்ச்சிகளுக்கு உடன்சென்று அவருடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். பின்னர், இவர் தனது 16 வயதில் ஒரு தனி இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். 1984-85ஆம் ஆண்டில், சங்கீதா சங்கர் வாரணாசியில் 'அபிநவ்' என்றழைக்கப்படும் இளம் இசைக்கலைஞர்களின் விழா ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார். 'கயாக்கி ஆங்' என்ற ஒருவகை வயலின் வாசிப்பராவார். சங்கீதா உலகம் முழுவதும் மற்றும் இந்தியா முழுவதும் ஏராளமான இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் நிகழ்த்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் கனடாவில் விரிவாக சுற்றுப்பயணம் செய்துள்ளார். மேலும் உருசியா, ஆலந்து, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனது பெயரை நிலை நாட்டினார்.
பணிகள்
[தொகு]2000 ஆம் ஆண்டில் 'சுவர் சாதனா' என்ற பெயரில் 26 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு தொலைக்காட்சித் தொடரையும் இவர் உருவாக்கினார். இந்தத் தொடர் மக்களிடையே இந்திய பாரம்பரிய இசை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதன் சிறப்பம்சங்கள் சுவாரஸ்யமான கதை வடிவம் மற்றும் மாதுரி தீட்சித், ஜாவேத் அக்தர், சாகீர் உசைன், பிர்ஜு மகாராஜ், ஜக்ஜித் சிங், நௌசாத், அமோல் பலேகர், பங்கஜ் உதாஸ், யுக்தா முகி, கனக் ரெலே, சுரேஷ் வாட்கர், என். ராஜம், சாதனா சர்கம், சங்கர் மகாதேவன், அனு கபூர், வீணா சகசுரபுதே, போன்ற பல்வேறு முக்கிய பிரபலங்களின் பங்கு இருந்தன. [1]
தற்போது, லெஜண்டரி லெகஸி பிரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற இசை நிறுவனத்தின் இயக்குநராகவும், மற்றும் நிறுவனராகவும் உள்ளார். [2] இது சிறந்த பாரம்பரிய இசையின் களஞ்சியத்தையும் பிற பிரத்யேக தயாரிப்புகளையும் கொண்டுள்ளது.
கற்பித்தல் பணி
[தொகு]தற்போது, சர்வதேச விஸ்லிங் வூட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் குரல் கலாச்சாரம் மற்றும் இசைப் பயிற்சியினை அளித்தும், வருங்கால திரைப்பட இயக்குநர்களுக்கு கற்பித்தும் வருகிறார். 'மிலாப்' என்ற கல்வித் திட்டத்தில் இவர் பணியாற்றி வருகிறார். இது மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் மனிதகுலத்தின் மத்தியில் மகிழ்ச்சி, அன்பு மற்றும் அமைதி ஆகியவற்றின் சூழலைக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Official Website of Sangeeta Shankar "Welcome to the official website of Sangeeta Shankar" பரணிடப்பட்டது 2021-03-06 at the வந்தவழி இயந்திரம்
- ↑ http://www.legendarylegacy.com