உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கீதா கிரிஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சங்கீதா கிரிஷ் (நடிகை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சங்கீதா கிரிஷ்
பிறப்புசங்கு ராமன்
வாழ்க்கைத்
துணை
கிரிஷ் (பாடகர்)
(2009–தற்போதுவரை)

சங்கீதா கிரிஷ் (பிறப்பு: 21 அக்டோபர் 1978) ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் பின்னணிப்பாடகியும் ஆவார். இவர் 90களின் இடைப்பகுதியில் நடிப்புத்துறையினுள் நுழைந்தார். உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்தமைக்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எ.ஆர்.ரகுமானுடனும் பணிபுரிந்திருக்கிறார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

சங்கீதா சென்னையில் பிறந்தவர்.[1] இவரது பெற்றோர் அரவிந்த், பானுமதி. சங்கீதாவின் பாட்டனார் கே. ஆர் பாலன் திரைப்படத் தயாரிப்பாளர், 20க்கு மேற்பட்ட தமிழ்ப்படங்களை தயாரித்திருக்கிறார். இவரின் தந்தையும் பல படங்களை தயாரித்திருக்கிறார்.[2] இவருக்கு இரு சகோதரர்கள் உள்ளனர்.[1] சங்கீதா ஓர் பரதநாட்டியக்கலைஞர். பரதத்தை தனது பள்ளிக்காலத்தில் பயின்றார் [3] இவர் பெசன்ட் நகர் சென் ஜேன்சு பள்ளியில் படித்தார்.

தொழில்

[தொகு]

90களின் கடைசியில் நடிப்புத்தொழிலை தொடங்கினார். ஆரம்பத்தில் குறைந்த முதலீட்டு திரைப்படங்களில் நடித்தார், இவர் விக்ரம், சூரியாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படம் தேசிய விருது பெற்றது. மாதவனுடன் இணைந்து எவனோ ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.

தொலைக்காட்சியில்

[தொகு]

விஜய் தொ.கா நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 இல் நடுவராக இருந்தார். தற்போது சீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்வுகளுக்கு நடுவராக இருந்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடன திறமைக்கு முக்கிய பங்கு இவருக்கு உண்டு.

சொந்த வாழ்க்கை

[தொகு]

2009 ஆம் ஆண்டு, பிப்ரவரி முதலாம் தேதி அன்று திருவண்ணாமலைக் கோவிலில், தமிழ்ப் பின்னணிப் பாடகரான கிரிஷை சங்கீதா திருமணம் செய்துகொண்டார்.[4] திரைத்துறையினர் திருமணத்திற்கு வந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.[5]

திரைப்படத்துறை

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி அடிக்குறிப்புகள்
1998 காதலே நிம்மதி தமிழ்
உதவிக்கு வரலாமா இசுடெலா தமிழ்
சமர் இன் பொத்லகெம் மலையாளம்
பகவத் சிங் தமிழ்
1999 தீபாஸ்தம்பாம் மகாஸ்சரியம் பிரியா மலையாளம்
வழுன்நொர் ரெபேக்கா மலையாளம்
கெஸ்ட் ஹவுஸ் தமிழ்
அசலா சன்தடி தெலுங்கு
அன்புள்ள காதலுக்கு தமிழ்
இங்கிலீஸ் மீடியம் மலையாளம்
2000 டபுள்ஸ் சங்கீதா தமிழ்
சரதா ஜெலிஜா மலையாளம்
வர்னகழ்சகள் மலையாளம்
2001 கபடி கபடி தமிழ்
நாவ்வுது பிரதகலிரா தெலுங்கு
மா அயன சுந்தராய்யா தெலுங்கு
2002 கத்கம் சீதாலக்‌ஷ்மி தெலுங்கு வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது (தெலுங்கு).
வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான சினிமா விருது
2003 பெல்லம் ஓரெல்டெ சந்தியா தெலுங்கு
ஈ அப்பாயி சாலா மன்சூடு ஜீவிதா தெலுங்கு
ஆயுதம் (திரைப்படம்) கல்யாணி தெலுங்கு
ஓரெ நீ பிரேமா பங்காரம் கானு சங்கீதா தெலுங்கு
பிதாமகன் கோமதி தமிழ் வெற்றியாளர், பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருது. (தமிழ்)
வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான தமிழ் நாடு மாநில திரைப்பட விருது
நேனு பெல்லிகி ரெடி பிரியா தெலுங்கு
டைகர் அரிச்சந்திரன் பிரசாத் சுவாதி தெலுங்கு
2004 மா இன்டிகொஸ்டெ எம் டெஸ்தாரு-மீ இன்டிகொஸ்டெ எம் ஸ்தாரு ஹாரிகா மாதவ் தெலுங்கு
குஷி குஷிகா சத்யபாமா தெலுங்கு
நல்ல பிரீத்தி கன்னடம்
விஜயேந்திர வர்மா தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2005 சங்கராந்தி தெலுங்கு
நா ஓபிரி கோவரி வேணு தெலுங்கு
அடிரின்டய்யா சந்ட்ரம் பத்மவதி (பட்டு) தெலுங்கு
2006 உயிர் (திரைப்படம்) அருந்ததி சத்யா தமிழ்
காசு பிரார்த்தனா தமிழ்
47ஏ பெசன்ட் நகர் வரை தமிழ்
2007 பானுமதி பானுமதி வெங்கட்ரமணா தெலுங்கு
எவனோ ஒருவன் வத்சலா வாசுதேவன் தமிழ்
2008 காளை லட்சுமி தமிழ்
மா அயன சந்தி பில்லாடு சிந்தாமணி தெலுங்கு
நேபாளி தமிழ்
மேஜிக் லேம்ப் அல்போன்சா மலையாளம்
நாயகன் மரு. சந்தியா விசுவநாத் தமிழ்
தனம் தனம் அனந்தராமன் தமிழ்
2009 நான் அவனில்லை 2 மஹாலக்‌ஷ்மி தமிழ்
மத்திய சென்னை தமிழ்
2010 சிறீமதி கல்யாணம் சுவேதா / சீதா தெலுங்கு
குட்டி பிசாசு காயத்ரி தமிழ்
மன்மதன் அம்பு தீபா தமிழ்
தம்பிக்கோட்டை பீடா பாண்டியம்மா தமிழ்
2011 புத்திரன் தமிழ்
துர்கா தெலுங்கு
உச்சிதனை முகர்ந்தால் நடேசனின் மனைவி தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 http://www.totaltollywood.com/interviews/Sangeetha_2057.html
  2. "AllIndianSite.com Tollywood - It's All About Sangeetha". Tollywood.allindiansite.com. Archived from the original on 2012-07-26. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  3. "Tamil Nadu / Chennai News : Actor Sangeetha content with her success". The Hindu. 2006-08-03. Archived from the original on 2007-07-07. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  4. "Actress Sangeeta weds singer Krish - Telugu cinema marriage". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  5. "Events - Numerous Stars At Sangeetha – Krish Wedding". IndiaGlitz. 2009-02-01. Archived from the original on 2009-02-03. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_கிரிஷ்&oldid=4114022" இலிருந்து மீள்விக்கப்பட்டது