உள்ளடக்கத்துக்குச் செல்

சக்தி ராஜ் பாரிக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்தி ராஜ் பாரிக்கர்
சக்தி ராஜ் பாரிக்கர்
சம்மு காசுமீர் மாநில அமைச்சர்
பதவியில்
30 ஏப்ரல் 2018 – 19 சூன் 2018
ஆளுநர்நரிந்தர் நாத் ஓக்ரா
முதலமைச்சர்மெக்பூபா முஃப்தி
சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
23 திசம்பர் 2014 – 21 நவம்பர் 2018
ஆளுநர்நரிந்தர் நாத் ஓக்ரா
முதலமைச்சர்மெக்பூபா முஃப்தி
முன்னையவர்அப்துல் மசித் வாணி
தொகுதிதோடா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 சனவரி 1970 (1970-01-18) (அகவை 54)
சலானா கிராமம்,
தேக்சில் திரப்சாலா,
தோடா மாவட்டம்,
சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்தொழிலதிபர்
அரசியல்வாதி

சக்தி ராஜ் பாரிகர் (Shakti Raj) ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் ஆவார். பரிகர் சம்மு காசுமீரில் உள்ள தோடா மாவட்டத்தில் உள்ள தோடா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சம்மு காசுமீர் சட்டப் பேரவையின் சட்டப்பேரவை உறுப்பினராகவும், பாரதிய ஜனதா கட்சி - சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி (Jammu and Kashmir People's Democratic Party) அரசாங்கத்தில் இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

மேல்நிலை கல்வியில் தேர்ச்சிப் பெற்ற பிறகு, சக்தி பரிகார் ஒரு பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கினார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2008ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த இவர், இந்தர்வால் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2014ஆம் ஆண்டில், முசுலிம் பெரும்பான்மை கொண்ட தோடாவிலிருந்து 4,040 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பாரிகர் அரசியல் வட்டாரங்களை ஆச்சரியப்படுத்தினார். இவர் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அப்துல் மசித் வாணியை தோற்கடித்தார். அப்துல் மசித் 20,532 வாக்குகளைப் பெற்றார். உமர் அப்துல்லா வேட்பாளர் சம்மு-காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி 16,416 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[3][4][5]

30 ஏப்ரல் 2018 அன்று, சக்தி பாரிகர் பாஜக-பிடிபி அரசாங்கத்தில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2020 சனவரி 13 அன்று, சம்மு-காசுமீரில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் குழு உறுப்பினராக பாரிகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்குழுவில் உதம்பூர் மக்களவை பிரதிநிதியாக இருந்தார்.[6]

2023 சூலை 22 அன்று, பாரிகர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். தோடா மாவட்டப் பாதுகாப்பு சாலைகள் மற்றும் முந்தைய தோடா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் சிறப்பு ஆட்சேர்ப்பு பேரணி குறித்து இவர் விவாதித்தார். பாரிகருக்கு அனைத்து உதவிகளும் செய்வதாக பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்தார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Farooq speaking Pak’s language: BJP legislator
  2. My Neta
  3. "Meet new faces in Jammu and Kashmir cabinet: Doctor, CA, MBA and more". India TV News. பார்க்கப்பட்ட நாள் 30 April 2018.
  4. "From CA to MBA to doctor: New faces in JK cabinet". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 30 April 2018.
  5. "Surprising Chenab". Kashmir Life. பார்க்கப்பட்ட நாள் 29 December 2014.
  6. "2 Former Ministers Shakti Parihar and Priya Sethi Among Five Elected as BJP National Council Members". The Publish. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  7. "Shakti Parihar, Wani call on Rajnath Singh". Daily Excelsior. பார்க்கப்பட்ட நாள் 23 July 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_ராஜ்_பாரிக்கர்&oldid=4122741" இலிருந்து மீள்விக்கப்பட்டது