சக்தி பர்மன்
சக்தி பர்மன் | |
---|---|
கொல்கத்தாவின் நுண்கலை அகாதமியில் சக்தி பர்மன் | |
பிறப்பு | கொல்கத்தா |
பணி | ஓவியர், சிற்பி |
சக்தி பர்மன் (Sakti Burman) என்பவர் 1935ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்து, பிரான்சில் வாழும் சமகால இந்தியக் கலைஞர் ஆவார்.
வங்கதேசம், பிரித்தானிய இந்தியா ஆகிய நாடுகளில் வளர்ந்தவர். இவர் கடந்த ஐந்து பதின்ம ஆண்டுகளாக பிரான்சில் வசித்து வருகிறார். அதே நேரத்தில் இந்தியாவுடன் வலுவான உறவுகளைப் பேணி வருகிறார். இந்தியாவில் இவர் தனது படைப்புகளை தவறாமல் காட்சிப்படுத்துகிறார். இவர் பிரான்சு நாட்டு ஓவியரான மைட் டெல்டெய்ல் என்பவரை மணந்துக்கொன்டார்.[1] இவரது குடும்பத்தில் பல பிரபல ஓவியர்கள் உள்ளனர். ஓவியரான இவரது மகள் மாயா பர்மன் பிரான்சில் வசித்து வருகிறார். மருமகள் ஜெயசிறீ பர்மன் இவரது கலையார்வத்தால் ஈர்க்கப்பட்டவர். ஜெயசிறீயின் கணவரான பரேஷ் மைத்தியும் ஒரு ஓவியவராவார். இந்தியா முழுவதுமுள்ள பல இடங்களிலும் தனது படைப்புகளைக் கொண்டு பல கண்காட்சிகளை நடத்தியும் பல பரிசுகளை வென்றும் உள்ளார்.
ஒரு ஓவியர் மற்றும் சிற்பியான பர்மனின் கலைப் படைப்புகள் புராண கற்பனை உள்ளடக்கத்தையும் மற்றும் வளமான வண்ணங்களையும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zaira Arslan (14 January 2013) "Happiness in Art", இந்தியன் எக்சுபிரசு. Retrieved 2013-09-24.
வெளி இணைப்புகள்
[தொகு]- Paintings at the website of Glenbarra Art Museum
- Website with brief biography and some images of his pictures
- "Sakti Burman's world". The Hindu (magazine). 22 June 2003 இம் மூலத்தில் இருந்து 26 ஆகஸ்ட் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100826000650/http://www.hinduonnet.com/mag/2003/06/22/stories/2003062200120200.htm.
- "Sakti Burman Profile,Interview and Artworks"