சக்கிமங்கலம்
சக்கிமங்கலம் (Sakkimangalam), தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், சக்கிமங்கலம் ஊராட்சியில் அமைந்த வருவாய் கிராமம் ஆகும். மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். மதுரைக்கு கிழக்கே 8 கிமீ தொலைவில், வைகை ஆற்றின் வடகரையில் சக்கிமங்கலம் உள்ளது. [1]
மதுரை மாநகராத்தின் நகர்புறத்தில் அமைந்த இக்கிராமத்தின் அஞ்சல் சுட்டு எண் 625201;இதன் அஞ்சலகம் சிலைமானில் உள்ளது தொலைபேசி குறியீடு எண் 04549 ஆகும். சக்கிமங்கலத்தின் சௌத் இந்தியன் வங்கியின் கிளை உள்ளது.
சக்கிமங்கலத்தின் குடியிருப்பு
[தொகு]- சக்கிமங்கலம்
- சமத்துவபுரம்
- முனியாண்டி புரம்
- அன்னை சத்தியா நகர்
- புவனேஸ்வரி காலனி
- அன்னை இந்திரா நகர்
- அம்பேத்கார் நகர்
- இ.புதூர்
- நரிக்குறவர் காலனி
- எம்.ஜி.ஆர். நகர்
- பசும்பொன் நகர்
- பி.டி.ஆர். நகர்
- உலமா நகர்
- அஞ்சுகம் நகர்
அருகமைந்த சிற்றூர்கள்
[தொகு]- சிலைமான்
- புளியங்குளம்
- எல்.கே.டி. நகர்
- இளமனூர்
- கார்சேரி
- ஆண்டார்கொட்டாரம்
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1,141 வீடுகள் கொண்ட சக்கிமங்கலத்தின் மொத்த மக்கள்தொகை 4,.428 ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 13,77 (31.10%) ஆகவுள்ளனர். எழுத்தறிவு 80.18% ஆகவுள்ளது. இங்கு 2402 தொழிலாளர்கள வாழ்கின்றனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 511 ஆகவுள்ளனர். இக்கிராமத்தில் தமிழ், தெலுங்கு, சௌராடிரம் பேசப்படுகிறது. இக்கிராமத்தின் மக்கள்தொகையில் 40% சௌராட்டிர கைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் ஆவார். [2]
அருகமைந்த கல்வி நிலையங்கள்
[தொகு]- அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி சக்கிமங்கலம்
- அரசினர் மேல்நிலைப்பள்ளி சிலைமான்
- வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, விரகனூர் [3]
- வேலம்மாள் மேனிலைப் பள்ளி, விரகனூர் [4]
- கே எல் என் பாலிடெக்னிக் கல்லூரி, கோழிமேடு
- கே எல் என் சிபிஎஸ்சி மேனிலைப் பள்ளி, கோழிமேடு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sakkimangalam
- ↑ Sakkimangalam Populaion Census 2011
- ↑ வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, விரகனூர் 625009
- ↑ VELAMMAL MATRICULATION HR. SEC. SCHOO, விரகனூர், மதுரை 625009
வார்ப்புரு:ABDULMAJEETH Youtuber