உள்ளடக்கத்துக்குச் செல்

சக்கரவர்த்திக் கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்கரவா்த்திக் கீரை

சக்கரவர்த்திக் கீரை
Invalid status  (NatureServe)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. album
இருசொற் பெயரீடு
Chenopodium album
L.
Distribution, from GBIF[1]
காட்டுக்கீரை

செனோபோடியம் ஆல்பம் என்ற தாவரவியல் பெயராலும் சக்கரவர்த்திக் கீரை என்று பொதுப்பெயரிலும் அழைக்கப்படும் இந்த தாவரம், செனோபோடியம் பேரினத்தில் வேகமாக வளரும் வருடாந்திர தாவரமாகும். உலகின் சில பகுதிகளில் பயிரிடப்பட்டு, உணவாக பயன்படுத்தப்பட்டாலும் இந்த தாவரம் பெரும்பாலான இடங்களில் களையாக கருதப்படுகிறது. பொதுவான பெயர்களில் கண்ணாடிக் கீரை, சிக்லிசக்கோலி, ஆங்கிலத்தில் பிக் வீட்(Pig Weed ) கூஸ் புட் (Goose Foot), காட்டு கீரை என அழைக்கப்படுகிறது.[2]

ஆங்கிலப் பெயர்கள் இந்த செனோபோடியம் பேரினத்தின் பிற இனங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன, இதன் காரணமாக இது பெரும்பாலும் வெள்ளை கூஸ்ஃபூட் என்றும் வேறுபடுத்தி அழைக்கப்படுகிறது.[3][4]

செனோபோடியம் ஆல்பம் வட இந்தியாவின் பல பகுதிகளிலும்,[5][6] நேபாளத்திலும் பதுவா எனப்படும் கீரை உணவுப் பயிராக பரவலாக பயிரிடப்பட்டு நுகரப்படுகிறது.

வகைப்பாட்டியல்

[தொகு]

செனோபோடியம் ஆல்பம் ஒரு சிக்கலான வகைப்பாட்டியலைக் கொண்டுள்ளது மேலும் பல நுண்ணிய இனங்கள், துணை இனங்கள் மற்றும் வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது, எனவே அவற்றுக்கு இடையில் வேறுபடுத்துவது கடினம். பின்வரும் உட்பிரிவு வகைப்பாடுகள் புளோரா யூரோபியாவால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன[7]

  • செனோபோடியம் ஆல்பம் சப்ஸ்ப். ஆல்பம்
  • செனோபோடியம் ஆல்பம் சப்ஸ்ப். ஸ்ட்ரியாட்டம் (கிராசன்) முர்ர்
  • செனோபோடியம் ஆல்பம் வர்.ரெட்டிகுலேட்டம் (எலன்) உட்டிலா

படத்தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chenopodium album L. GBIF.org (25 November 2018) GBIF Occurrence Download எஆசு:10.15468/dl.ie2d48
  2. BSBI: Database of names (xls file) பரணிடப்பட்டது 2009-07-07 at the Portuguese Web Archive
  3. Pacific Island Ecosystems at Risk: Chenopodium album பரணிடப்பட்டது 2020-01-14 at the வந்தவழி இயந்திரம்
  4. Flora of North America: Chenopodium album
  5. National Institute of Industrial Research (2004). Handbook on Herbs Cultivation and Processing. Delhi, India: Asia Pacific Business Press. p. 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7833-074-1. இணையக் கணினி நூலக மைய எண் 60522522.
  6. "Chenopodium album - Bathua". Flowersofindia.net. பார்க்கப்பட்ட நாள் 15 August 2013.
  7. Flora Europaea: Chenopodium album
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கரவர்த்திக்_கீரை&oldid=3929488" இலிருந்து மீள்விக்கப்பட்டது