சகட யோகம் (சோதிடம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சகட யோகம் ஒருவரின் சாதகத்தில் காணப்படும் தீமைதரும் யோகமாகும். ஒருவரின் சாதகத்தில் குருவுக்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் சந்திரன் காணப்படின் அச்சாதகர் சகடயோகத்தின் சுப அசுப பலன்களை அனுபவிப்பர்.
சகட யோகம் சம்பந்தமாகக் குறிப்பிடப்பட்ட தோஷ நிவர்த்திகள் காணப்படாதவிடத்து, சகட யோகம் பொருந்திய சாதகர் பல தீய பலன்களுக்கு உள்ளாவர். வண்டியின் சக்கரம் போல மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் மாறிவரும் நிலைமையினை வாழ்விற் சந்தித்து பற்பல தடைகளுக்கு எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கைப் போரட்டத்தில் தோல்வியினைத் தழுவி நிற்பார்.