உள்ளடக்கத்துக்குச் செல்

க. ச. குகதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. ச. குகதாசன்
K. S. Kugathasan
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 சூலை 2024
முன்னையவர்இரா. சம்பந்தன்
தொகுதிதிருகோணமலை மாவட்டம்
பெரும்பான்மை16,770
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிரியாய், திருகோணமலை மாவட்டம், இலங்கை
குடியுரிமைஇலங்கையர்
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கதிரவேலு சண்முகம் குகதாசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினரான இவர் அக்கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனின் இறப்பை அடுத்து 2024 சூலை 2 இல் திருகோணமலை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1]

திருகோணமலை, திரியாயைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதாசன், நீண்ட காலம் கனடாவில் வசித்து வந்தார். 2020 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவராகப் பணியாற்றுகிறார். 2020 நாடாளுமன்றத் தேர்தலில் குகதாசன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 16,770 வாக்குகளைப் பெற்றார். இத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு உறுப்பினரையே தமிழரசுக் கட்சி பெற்றது. இரா. சம்பந்தனுக்கு அடுத்து அதிக வாக்குகளை பெற்ற அடிப்படையில் இவர் சம்பந்தனின் இறப்பை அடுத்து 2024 சூலையில் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.[1]

தேர்தல் வரலாறு[தொகு]

சண்முகம் குகதாசனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2020 நாடாளுமன்றத் தேர்தல் திருகோணமலை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16,700 தெரிவு செய்யப்படவில்லை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._ச._குகதாசன்&oldid=4040182" இலிருந்து மீள்விக்கப்பட்டது